ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்.. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிபேடுகள்.. அவசரகால நிலையை சமாளிக்க புதிய திட்டம்!

ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்.. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிபேடுகள்.. அவசரகால நிலையை சமாளிக்க புதிய திட்டம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற ஹெலிபேடுகள் அமைப்பதற்கு ஆரம்ப கால நடவடிக்கைகளை மேற்கொள்ள சாலைப்போக்குவரத்து துறை அமைச்சகமும் விமான போக்குவரத்து துறை அமைச்சகமும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தேசிய நெடுஞ்சாலைகளில் அவ்வபோது ஏற்படும் விபத்துகளினாலும் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகளினாலும் உண்டாகும் அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க சாலையின் குறிப்பிட்ட இடங்களில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க வசதியாக ஹெலிபேடுகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நம்மூரில் சாதாரண சாலைகளில் ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டாலே சில மணி நேரத்திற்கு மிக பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிலும் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களையும், மற்ற இதர விஷயங்களையும் சரி செய்து மீண்டும் பழையநிலைக்கு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

சாதாரண சாலைகளுக்கே இந்த நிலைமை என்றால் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு சொல்லவா வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் அவ்வபோது விபத்துக்கள் ஏற்பட்டுவருவது வழக்கமாகிவிட்டது. சிறிய விபத்தாக இருந்தால் கூட அந்த நேரத்தில் அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஒட்டுமொத்த சாலையையும் ஸ்தம்பிக்க வைத்து விடுகிறது.

Read More : ஒரு கிலோ எடை குறைத்தால் ரூ.1000 கோடி.. சவால் விட்ட நிதின் கட்கரி.. 32 கிலோ குறைத்த எம்பி!

அதுவும் பெருமளவில் விபத்துக்கள் ஏற்படும் போது அவற்றை சரி செய்து போக்குவரத்து நெரிசலை மீண்டும் சீராக்குவதற்கு பல மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. இதனால் மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றன. மேலும் விபத்தினால் காயமடைந்தவர்களை அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதிலும் கால தாமதம் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சினையை சமாளிப்பதற்காக அவசர கால நிலைக்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்த இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதைப் பற்றி பேசிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, ஹெலிகாப்டர்களை பயன்படுத்த வேண்டும் எனில் அவை தரையிறங்க சரியான ஹெலிபேடுகள் தேவை. தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட இடைவெளியில் ஹெலிபேடுகளை அமைத்து அவசர காலநிலையில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கி சூழ்நிலையை சரி செய்ய ஏதுவாக வசதிகளை செய்வதற்கு விமான போக்குவரத்து அமைச்சகமும் சாலை போக்குவரத்து அமைச்சகமும் சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

முக்கியமாக அவசர காலங்களில் சாலை வழி போக்குவரத்து கடினமாக இருப்பதாக கருதப்படும் இடங்களிலும், தரை மார்க்கமாக செல்ல முடியாதபடியும், எளிதில் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கும் மலைப்பகுதிகளிலும் இந்த அவசரகால ஹெலிகாப்டர் சேவை மிகவும் உபயோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இயற்கை பேரிடர்களின் போதும் அல்லது விபத்துகளினால் காயப்பட்டவர்களை உடனடியாக வெகு தூரத்தில் இருக்கும் பகுதிகளிலிருந்தும் மலைப்பகுதியில் இருந்தும் மீட்டு உடனடி சிகிச்சை தருவதற்கு வசதியாக இருக்கும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற ஹெலிபேடுகள் அமைப்பதற்கு ஆரம்ப கால நடவடிக்கைகளை மேற்கொள்ள சாலைப்போக்குவரத்து துறை அமைச்சகமும் விமான போக்குவரத்து துறை அமைச்சகமும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த திட்டம் சாத்தியமாகும் பட்சத்தில் விபத்துகள் ஏற்படும் போது சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மேலும் நீண்ட நேரம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறைக்கப்படும் என்பது முற்றிலும் உண்மை.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Ambulance, Helicopter