ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்தும், என்ன மாதிரியான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தொடர்பாக ராணுவம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-
ஒட்டு மொத்த இந்தியாவும், ராணுவமும் பெரும் துயரத்தில் இருக்கிறது. இந்த துயரம் நீங்குவதற்கு இன்னும் சில காலம் ஆகும். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும், சாலை மார்க்கமாக இன்று மதியம் 12 மணியளவில் சூலூருக்கு கொண்டு வரப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக உடல்களை வான்வழியே கொண்டு செல்ல முடியவில்லை.
சூலூரில் இருந்து அனைத்து உடல்களும் இன்று மாலைக்குள் டெல்லி கொண்டு வரப்பட்டு விடும். அங்கு நாட்டின் உயர் தலைவர்கள், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
படுகாயம் அடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவர் சாலை மார்க்கமாக ஆம்புலன்ஸ் மூலம் சூலூர் கொண்டு வரப்பட்டுள்ளார். அங்கிருந்து அவர், பெங்களூரு கமாண்ட் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்.
Also Read : ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய குரூப் கேப்டன்... வீர தீரத்திற்கான பதக்கத்தை பெற்றவர்
உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களை அடையாளம் காண்பதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீர மரணம் அடைந்தவர்களின் உறவினர்கள் அனைவரும் டெல்லி வந்துள்ளார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
அறிவியல் உதவியோடு, உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் அடையாளம் காண்பார்கள். அடையாளம் காணும் பணி நிறைவு பெற்றதும், உடல்கள் சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் நாளை காலை வழங்கப்படும்.
Also Read : இந்தியாவின் அடுத்த முப்படைகளின் தலைமை தளபதி இவர் தானா?
ராணுவ முறைப்படி முழு அரசு மரியாதையுடன் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Helicopter Crash, Indian army