ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் திட்டம்.. அவரச மருத்துவ உதவிக்கு புக்கிங் செய்வது எப்படி?

ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் திட்டம்.. அவரச மருத்துவ உதவிக்கு புக்கிங் செய்வது எப்படி?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மலைப்பகுதிகள், தொலைதூரப் பகுதிகள், பின்தங்கிய பகுதிகளில் இருந்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலமாக நோயாளிகளை அழைத்து வர முடியும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் சாலை விபத்துகளால் உயிர் இழப்பு ஏற்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. விபத்துகளை தடுக்க சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்துவது, விபத்து ஏற்படும் இடங்களில் அதற்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என பல நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

விபத்தில் சிக்கும் நபர்கள் அல்லது நோயாளிகள் சிலருக்கு உயர்தர சிகிச்சைகள் உடனடியாக தேவைப்படலாம். ஆனால், அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து உயர்தர சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் வெகுதொலைவில் இருக்கக் கூடும். சாலை மார்க்கமாக பயணித்துச் செல்லும்போது விலைமதிப்பு மிகுந்த நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கும்.

இதை தவிர்க்கும் வகையிலும், தேவை உள்ளவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கிடும் வகையிலும் ‘சஞ்சீவனி சேவா’ என்னும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

Read More : துபாய் அருங்காட்சியகத்தில் ஊழியராக அறிமுகமான மனித ரோபோ அமேகா!

உதாரணத்திற்கு மலைப்பகுதிகள், தொலைதூரப் பகுதிகள், பின்தங்கிய பகுதிகளில் இருந்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலமாக நோயாளிகளை அழைத்து வர முடியும். அதாவது ரிஷிகேஷ் பகுதியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருக்கும் ஹெலிகாப்டரானது, நாட்டின் எந்த மூளைக்கும் செல்லும்.

இந்த சேவையை வழங்குவதற்காக நாட்டின் 3 இடங்களில் ஹெலிகாப்டர் காரிடார்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதிலும் மருத்துவ உதவியை கொண்டு செல்வதற்கான ஒரு படிக்கல்லாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

மூன்று இடங்களில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்குவதற்கான அறிவிப்பை மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் வெளியிட்டார். நாட்டின் பெருவாரியாக இருக்கும் மக்கள் தொகைக்கு, ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மருத்துவச் சேவைகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.

அனைத்து பருவ காலத்திலும், இரவு, பகல் பாராமல் ஹெலிகாப்டர்களை இயக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளையும் அமைச்சர் சிந்தியா வெளியிட்டார்.

Read More : இனவெறி கொடூரம்.. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு 11 முறை கத்தி குத்து..உயிருக்கு போராட்டம்

சோதனை அடிப்படையில் செயல்படுத்தபடும் திட்டம்

ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் திட்டமானது முதல் கட்டமாக சோதனை அடிப்படையில், ரிஷிகேஷ் பகுதியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. நோயாளியை ஏற்றுவதற்கான ஸ்ட்ரெச்சர் வசதியும், அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவரும் ஹெலிகாப்டரில் உண்டு.

bula

மறுமுறை எரிபொருள் நிரப்பாமல் இந்த ஹெலிகாப்டர் சுமார் 300 கி.மீ. தொலவுக்கு பறந்து செல்ல முடியும். இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு சேவையளிக்க முன்வரும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புக்கிங் செய்வது எப்படி?

எந்த மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்ல விரும்புகிறீர்களோ அல்லது எங்கிருந்து அழைத்துச் செல்ல விரும்புகிறீர்களோ அந்த மருத்துவமனையை தொடர்பு கொள்ளவும். நிறைய தனியார் நிறுவனங்கள் சேவை வழங்க காத்திருக்கின்றன.
தொடர்புடைய துறையினர் நோயாளியின் நிலையை பரிசோதனை செய்து, அவர்களை கொண்டு செல்ல அனுமதியளிப்பதற்கான கேஸ் ரிப்போர்ட் தயார் செய்வார்கள்.
இந்த அனுமதி கிடைத்தவுடன், நோயாளிகள் ஏர் ஆம்புலன்ஸ் தரையிறக்க இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
பணியாளர்களுடன் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருக்கும். சாதாரண ஆம்புலன்ஸில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் இடம்பெற்றிருக்கும்.
சீட் அல்லது ஏர் பெட் மீது வைத்து நோயாளிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். தேவையான வான் மற்றும் மருத்துவ ஒப்புதலுக்கு பிறகு நோயாளி, தொடர்புடைய இடத்திற்கு கொண்டு செல்லப்படுவார்.
அரசு மருத்துவமனையில் இருந்து புக்கிங் செய்ய விரும்பினால் மருத்துவமனை நிர்வாகம் அல்லது மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.
எவ்வளவு கட்டணம்: ஒரு மணி நேர பயணத்திற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் செலவாகும். நீங்கள் செல்லு இடம், மருத்துவமனைக்கான தொலைவு, எந்த வசதியுள்ள ஹெலிகாப்டரை தேர்வு செய்வீர்கள் என்பதை பொருத்து கட்டணம் மாறும்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Ambulance, Trending, Viral