வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வட மாநிலங்களில் குளிர்
சாம்பல் நிற தலைகொண்ட பறவைகள் குஜராத் நோக்கி படையெடுக்கின்றன. இந்த ஆண்டில் பல்வேறு வகையான பறவைகள் வந்துள்ளதாகவும், மார்ச், ஏப்ரல் மாதங்களில் திரும்பிச் சென்றுவிடும் என்றும் பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் மைனஸ் 6 டிகிரி அளவுக்கு வெப்பநிலை பதிவானது.
நாடு முழுவதும் குளிர்காலம் நிலவும் சூழலில், வடமாநிலங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. டெல்லியில் மூடுபனி காரணமாக, குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் வரை சென்றது. இது இந்தப் பருவத்தில் பதிவரான குறைந்தபட்ச வெப்பநிலையாகும் . இதேபோல, ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஸ்ரீநகரில் மைனஸ் 6 டிகிரி அளவுக்கு பதிவானது. காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகள் உறைந்து காணப்படுகின்றன. குடிநீர் குழாய்களிலும் நீர் உறைந்தது.
ராஜஸ்தானில் ஃபட்டேபூர், சுரு உள்ளிட்ட பகுதிகளில் உறைநிலை வெப்பம் பதிவானது. அதாவது ஃபட்டேபூர் பகுதியில் மைனஸ் 3.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவானது. அதற்கு அருகில் உள்ள சுரு பகுதியில் மைனல் 1.1 டிகிரி செல்சியஸாக இருந்தது. உத்தரகாண்டு மாநிலத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பனிப்பொழிவு பெய்து வருவதால், மாநிலத்தின் சில பகுதிகள் பனியால் மூடப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநித்தின் அமிர்தசரஸ் பகுதியில் மூடுபனி நிலவியது. தீசுவாலைகளை ஏற்றி, இதமான சூழலை மக்கள் ஏற்படுத்திக் கொண்டனர். இதேபோல, இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் தலைநகர் ஷிம்லா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள், பனிக்கட்டிகளால் சூழப்பட்டன.
இந்நிலையில், குளிர்காலம் தொடங்கியதால், குஜராத் மாநிலத்துக்கு வெளிநாட்டுப் பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் முதல் ஜனவரி வரையான காலத்துக்கு ரஷ்யாவின் சைபீரியா உள்ளிட்ட குளிர் பிரதேசங்களிலிருந்து பறவைகள் வருவது வழக்கமாக உள்ளது.
படங்கள் : சிம்லா மாவட்டத்தில் உள்ள நர்கண்டா மற்றும் மண்டோல் கிராமம்
இதன்படி, சாம்பல் நிற தலைகொண்ட பறவைகள் குஜராத் நோக்கி படையெடுக்கின்றன. இந்த ஆண்டில் பல்வேறு வகையான பறவைகள் வந்துள்ளதாகவும், மார்ச், ஏப்ரல் மாதங்களில் திரும்பிச் சென்றுவிடும் என்றும் பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.