• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • டெல்லி வன்முறை: உயிரிழப்பு 45-ஆக அதிகரிப்பு - 885 பேர் கைது - ஷாகின்பாக்கில் 144 தடை உத்தரவு

டெல்லி வன்முறை: உயிரிழப்பு 45-ஆக அதிகரிப்பு - 885 பேர் கைது - ஷாகின்பாக்கில் 144 தடை உத்தரவு

டெல்லி வன்முறை

டெல்லி வன்முறை

  • Share this:
    டெல்லி வன்முறை தொடர்பாக 885 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாகின்பாக்கில் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டு காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

    டெல்லியில் நடைபெற்ற வன்முறை முடிவுக்கு வந்து 5 நாட்கள் ஆகிவிட்டன.  வன்முறையில் 42 பேர் உயிரிழந்ததுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், வன்முறை பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    ஜாப்ராபாத், மாஜ்பூர், பாபர்பூர், சீலாம்பூர் பகுதிகளில் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், சாலைகளில் மக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.  எனினும் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வரும் ஷாகின் பாக்கில், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தப் போவதாக இந்து சேனா அமைப்பு அறிவித்தது.

    பின்னர் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு தனது அறிவிப்பை அந்த அமைப்பு திரும்பப் பெற்றது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாகின் பாக்கில், 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்புக்காக ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

    வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறையினர் 167 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.  இதில் 36 வழக்குகள் ஆயுதச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இதுவரை 885 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே, மேகாலயாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.  வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் 6 மாவட்டங்களில் இணையதள மற்றும் எஸ்எம்எஸ் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: