Home /News /national /

திருப்பதி கோவிலில் தள்ளுமுள்ளு: பக்தர்கள் மருத்துவமனையில் அட்மிட்

திருப்பதி கோவிலில் தள்ளுமுள்ளு: பக்தர்கள் மருத்துவமனையில் அட்மிட்

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசல்

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசல்

  • News18
  • Last Updated :
    புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

    ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், பெருமாள் கோவில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதாலும், முஹர்ரம், சனி, ஞாயிறு என்று தொடர் விடுமுறை காரணமாகவும் நேற்று மாலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை முதல் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளிலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால், இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர்.  அங்கு போதிய வசதிகள் இல்லாததால் கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பக்தர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருமலையில் உள்ள தேவஸ்தான மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Published by:DS Gopinath
    First published:

    Tags: Thirumala, Tirupathi

    அடுத்த செய்தி