இமாச்சல பிரதேசத்தில் தொடரும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இமாச்சல பிரதேசத்தில் தொடரும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சல பிரதேசத்தில் தொடரும் கனமழை
  • News18
  • Last Updated: September 24, 2018, 8:09 AM IST
  • Share this:
இமாச்சல மாநிலத்தில் தொடரும் கனமழை காரணமாக, 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கரைபுரண்டோடும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடரும் மழையால் அம்மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. குறிப்பாக கின்னாவூர், குலூ, கங்காரா மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கனமழையால் ரவி, பியாஸ் உள்ளிட்ட நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மணாலியில் வெள்ளப்பெருக்கு காரணமாக  மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.  ஒரு கனரக லாரி மற்றும் சொகுசு பேருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளது.


இமாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தால் அடித்து செல்லப்படும் லாரி


ஆறுகளில் வெள்ளப் பெருக்கு அதிகரித்த வண்ணம் இருப்பதால் மக்கள் அருகில் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. வெள்ள பாதிப்பை தொடர்ந்து 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் மற்றும் மின்சார வசதி இல்லாமல் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் போக்குவரத்தும் முடங்கியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகளில் இருந்து அதிக அளவில் நீர்திறக்கப்பட்டுள்ளது.
First published: September 24, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading