வடமாநிலங்களில் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்வு!

ழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான கட்டணத்தை ரத்து செய்வதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: August 12, 2019, 8:37 AM IST
வடமாநிலங்களில் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்வு!
கேரளா
Web Desk | news18
Updated: August 12, 2019, 8:37 AM IST
கனமழையால் தண்ணீரில் மிதக்கும் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170-ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் ஆய்வு செய்தார்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கேரளாவில் ஒருவாரமாக கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 2 நாட்களாக மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. 1,551 நிவாரண முகாம்களில் 2 லட்சத்து 27,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொச்சியில் விமான சேவை தொடக்கம்

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன 58 பேரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. கொச்சி விமான நிலையத்தில் வெள்ளம் வடிந்ததை அடுத்து நேற்று பிற்பகல் முதல் விமான சேவை தொடங்கியுள்ளது.

8 ரயில்கள் இன்று ரத்து

அதேசமயம், கோவை - கண்ணூர் செல்லும் பயணிகள் ரயில் உட்பட 8 ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ராகுல் ஆறுதல்

நீலாம்பூர் மாவட்டத்திற்குட்பட்ட கவளப்பாராவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை வயநாடு தொகுதி எம்.பியும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

கேரள மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்-ராகுல்

மலப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய ராகுல்காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மத்திய அரசு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இன்று வயநாட்டில் ராகுல் காந்தி ஆய்வு செய்கிறார்

2-வது நாளான இன்று தனது சொந்த தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தி வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளார். இதனிடையே, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யக் கூடும் என்பதால் ஆரெஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. துங்கபத்திரா நதியில் ஒரு லட்சத்து 70,000 கன அடி நீர் திறக்கப்பட்டதால் பாரம்பரிய நகரான ஹம்பி நகரம் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. மேலும், துங்கபத்திரா நதிக்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இடங்களில் அமித் ஷா, எடியூராப்பா ஆய்வு

கர்நாடகாவில் இதுவரை மழை பாதிப்பிற்கு 40 பேர் உயிரிழந்துள்ளனர். பெலகாவி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமானத்தில் பறந்து ஆய்வு செய்தார். அவருடன் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதற்கு பின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமித் ஷா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் உறுதி பூண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.மகாராஷ்டிராவில் பெய்த கனமழை

மகாராஷ்டிரா மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். அல்மட்டி அணையில் இருந்து 5 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் கிருஷ்ணா நதிக்கரையோரத்தில் உள்ள பல்வேறு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கோலாப்பூர், சங்கிலி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சங்கிலி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த 5 பேரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. இதுவரை மழை பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

குஜாராதில் 3 நாட்களாக பெய்த கனமழை

குஜாராத் மாநிலத்தில் கட்ச், போர்பந்தர் உள்ளிட்ட இடங்களில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. காரத் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடி வரும் நிலையில், விவசாயிகள் சிலர் தங்களது கால்நடைகளை ஆற்றின் குறுக்கே கடந்து சென்று மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர். குஜராத் மாநிலத்தில் மழை பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான கட்டணத்தை ரத்து செய்வதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க... அவலாஞ்சியில் அதிக மழை பொழிவுக்கு காரணம் என்ன?

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...