Home /News /national /

அரபிக்கடலில் உருவாகும் புதிய புயலால் கேரளாவில் கனமழை எச்சரிக்கை - தமிழகத்திற்கு மழை உண்டா?

அரபிக்கடலில் உருவாகும் புதிய புயலால் கேரளாவில் கனமழை எச்சரிக்கை - தமிழகத்திற்கு மழை உண்டா?

மழை

மழை

கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் அறிகுறியாக தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை புயலாக மாறும் என தெரிகிறது.

    இந்நிலையில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கன்னூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, திருவனந்தபுரத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

    மேலும், தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இந்த மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also read... கால அவகாசம் நிறைவு - அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு இல்லை






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Kerala, Weather Forecast

    அடுத்த செய்தி