மும்பையில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! இரண்டு நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை

மகாராஷ்ட்ராவில் மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50-ஐ தாண்டியுள்ளது.

மும்பையில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! இரண்டு நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை
மும்பையில் கனமழை
  • News18
  • Last Updated: July 3, 2019, 10:15 AM IST
  • Share this:
மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பை மழை வெள்ளத்தில் மிதந்து வரும் நிலையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், அதிதீவிர கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மும்பையில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நாளில் 375 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. 6 நாட்களாக விடாது பெய்யும் கனமழையால், மும்பை, நவிமும்பை, புனே, தானே உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் அனைத்தும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகின்றன. மும்பையில் உள்ள சகினாகா காவல் நிலையத்துக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.


மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர்

வெள்ளப்பெருக்கு காரணமாக, அந்தேரி பகுதியில் உள்ள சுரங்கப்பாதை மூடப்பட்டது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மும்பை ஏர்-இந்தியா காலனியில், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார். தானேவில், கனமழையில் 6அடி நீள மலைப்பாம்பு அடித்துவரப்பட்டது. லோக்மான்யா நகரில் உள்ள குழாயில் சிக்கிக் கொண்ட மலைப்பாம்பு, பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டது.இதனிடையே மும்பையின் கிழக்கு மலாட் பகுதி மற்றும் புனே சிங்காத் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதுவரை 50-ஐ தாண்டியது.

படுகாயமடைந்து சதாப்தி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து ஆறுதல் கூறினார். நாசிக் பகுதியில் குடிநீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். தொடர் மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதுவரை 50-ஐ தாண்டியுள்ளது.

போக்குவரத்து சேவை முடக்கம்

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளது. மும்பை விமான நிலையத்தில் ஜெய்ப்பூரிலிருந்து வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்கும்போது, பிரதான ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது. மும்பைக்கு வர வேண்டிய 52 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. மழை நீர் தேங்கியுள்ளதால் பிரதான ஓடுபாதை மூடப்பட்டது. விமான சேவை தொடங்குவதற்கு 48 மணிநேரங்கள் பிடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில் மற்றும் பேருந்து சேவைகளும் பெரும்பாலும் முடங்கியுள்ளன.

அடுத்த 48 மணிநேரத்துக்கு கனமழை பெய்யும்

மும்பை மற்றும் மும்பை புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல, விதர்பா, மரத்வாடா பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும் என்றும், மலைப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்ட்ரா மாநில மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.திவாரி அணையில் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியது

ரத்னகிரியில் உள்ள திவாரி அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து நள்ளிரவில் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேறியது. இதனால், அணையின் கீழ் பகுதியில் உள்ள 7 கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தது. கரையோரத்தில் இருந்த 12 வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதில், 20 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் 2 பேரை சடலமாக மீட்டனர்.

 

மேலும் படிக்க... நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த செறிவூட்டும் கிணறுகளை அமைக்கும் பெண்கள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading