கேரளாவில் இன்றும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கோட்டயம், இடுக்கி உட்பட எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும், எட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கேரளா முழுவதுமாக உள்ள நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. திருச்சூர் சாலக்குடி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அதிரப்பள்ளி அருவி ஆக்ரோஷமாக கொட்டி வருகிறது.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆறன்முலா, பம்பா போன்ற முக்கிய நதிகள் நீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. வயநாட்டிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு மலைகளில் இருந்து உருண்டு வந்த பெரிய பெரிய பாறைகள் சாலைகளில் விழுந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இடுக்கி அணையும் அபாய நிலையில் உள்ளது.
அதிகாரிகள் தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மற்றும் பத்தனம்திட்டா ஆட்சியாளர் கலந்தாய்வு நடத்தியுள்ளார். இதில் சபரிமலை நடை நிறை புத்தரி பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. ஐயப்ப பக்தர்கள் மற்ற மலைப்பாதைகள் வழியாக வர அனுமதி மறுக்கப்பட்டு ஐயப்பன் சாலை வழியாக மட்டுமே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் நதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆலப்புழாவிலும் பெய்து வரும் மழை காரணமாக சாலைகளின் நடுவே அங்காங்கு திடீர் பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.