Cyclone Nisarga | கரையைக் கடக்கும் நிசார்கா புயல் - மகாராஷ்டிரா & குஜராத்தில் பலத்த காற்றுடன் கனமழை

Cyclone Nisarga | நிசார்கா புயல் கரையை கடக்க ஆரம்பித்ததை அடுத்து மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

Cyclone Nisarga | கரையைக் கடக்கும் நிசார்கா புயல் - மகாராஷ்டிரா & குஜராத்தில் பலத்த காற்றுடன் கனமழை
சூறாவளிக்காற்றால் விழுந்த மரம்
  • Share this:
அரபிக்கடலில் உருவாகி தீவிரப்புயலாக உருமாறியுள்ள நிசார்கா, பிற்பகல் 1 மணிக்கு கரையை கடக்க தொடங்க ஆரம்பித்துள்ளது. தற்போது அந்தப் புயல் மகாராஷ்டிராவின் தெற்கு அலிபாக்கில் இருந்து தென் திசையில் 40 கிலோ மீட்டர் தொலைவிலும், தெற்கு மும்பையில் இருந்து தென் திசையில் 95 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

பிற்பகல் 4 மணிக்குள் ஹரிஹரேஷ்வர் - டாமன் இடையே புயல் கரையை முழுமையாக கடந்துவிடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதற்கிடையே, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்து வருகிறது.


பலத்த காற்றால் ராய்காட் மாவட்டத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்களும் நிசார்கா புயலின் கோரத்தாண்டவத்திற்கு தப்பவில்லை.

நிசார்கா புயலால் மணிக்கு 100 முதல் 120 மீட்டர் வேகத்தில் கடல்காற்று வீசுவதால், மும்பையின் வெர்சோவா கடற்கரையில் அலைகள் ஆக்ரோஷமாக காணப்பட்டன. இதே போல கோவாவின் மீராமர் கடற்கரையிலும் கடல் கொந்தளிப்புடன் உள்ளது.

நிசார்கா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிராவில் இண்டிகோவின் 17 விமானங்கள் உள்பட 31 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.இதே போல, மும்பை, தானே, ராய்காட் ஆகிய மாவட்டங்களில் ரயில் சேவை நிறுத்தப்பட்டன. புயலை எதிர்கொள்ள மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

Also read... INX மீடியா பணமோசடி வழக்கு - ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்










Also see...
First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading