• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • திருப்பதியில் கனமழை- திருமலைக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் பாதையில் வெள்ளம்

திருப்பதியில் கனமழை- திருமலைக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் பாதையில் வெள்ளம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் இன்று மாலை முதல் திடீரென்று மழை வெள்ளம் வழிந்தோடுவதால் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர்.

  • Share this:
    வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் கனமழை பெய்துவருகின்றது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தழுத்த தாழ்வு நிலையின் காரணமாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதேபோல, ஆந்திராவிலும் கனமழை பெய்துவருகிறது.

    குறிப்பாக, திருப்பதி மலையில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருப்பதி மலையில் உள்ள ஏரிகள், குட்டைகள், தடுப்பணைகள் ஆகியவை அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக மலைப் பகுதியில் ஆங்காங்கே புதிதாக சிறிய அளவிலான நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. மேலும் மலைப் பகுதி முழுவதும் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு பல்வேறு பகுதிகளிலிருந்து வெள்ளமாகவும், ஊற்றாகவும் வெளிவரும் மழைநீர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து செல்லும் படிக்கட்டுகளில் பாய்ந்து ஓடுகிறது. இதன் காரணமாக நடந்து மலையேறி சென்ற பக்தர்களில் பலர் மேற்கொண்டு முன்னேற இயலாமல் சிக்கி கொண்டுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: