• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மேற்கு வங்க மாநிலத்தில் 14 ஆண்டுகளில் இல்லாத கனமழை- வெள்ளத்தால் சூழ்ந்த கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலத்தில் 14 ஆண்டுகளில் இல்லாத கனமழை- வெள்ளத்தால் சூழ்ந்த கொல்கத்தா

கொல்கத்தா மழை

கொல்கத்தா மழை

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழையால், தலைநகர் கொல்கத்தாவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டன.

  • Share this:
    மேற்குவங்க மாநிலத்தில் தலைநகர் கொல்கத்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலே கனமழை பெய்தது. இதனால், தாப்சியா, உல்டாதங்கா, பால்மர் பசார், ஜோத்பூர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்திலும் வெள்ள நீர் சூழ்ந்தது. எனினும், விமானப் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக, வெள்ள நீருக்கு மத்தியில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதேபோல, பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர். கழிவுநீர் செல்லும் பாதைகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    பல்வேறு பகுதிகளிலும் 10 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவானது. கடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு, செப்டம்பர் மாதத்தில் ஒரே நாளில் இந்த அளவுக்கு மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதனிடையே, உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் மிக அதீத கனமழை பெய்தது. இதனால், எல்லை சாலை அமைப்பு தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் சேதமடைந்தன. மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் ஹிமான்சு குரானா தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், குஜராத், இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: