வட மாநிலங்களில் கொட்டி தீர்க்கும் கனமழை.. யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவு எட்டியது

கங்கா நதி

டெல்லியில் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளது.

 • Share this:
  வடமாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், டெல்லியில் காலை முதலே கனமழை பெய்தது. கான்பூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர். இடைவிடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால், பிரகலாத்பூர் சுரங்கப்பாதையை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

  யமுனா பஜார் பகுதியில், முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் வெள்ளத்தில் ஊர்ந்தபடி சென்றன. தொடர் மழையால் பிரகதி மைதான் பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் வெளியே வர முடியாமல் பெரும்பாலோர் வீடுகளுக்குள்ளே முடங்கினர்.

  Also read : மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை - பாஜக எம்.பி.

  கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அபாய அளவுடன் யமுனையில் வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். மாடல் டவுணில் உள்ள நைனி ஏரி நிரம்பியுள்ள நிலையில், முறையான பராமரிப்பு இல்லாதததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

  ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்த கனமழையால், அஜ்மீரில் உள்ள புஷ்கர் ஏரி நிரம்பியது.இந்நிலையில் இமாச்சலபிரதேச மாநிலம் லாஹூல்-ஸ்பிதி பகுதியில், கனமழை, நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

  Also Read : குதிரன் சுரங்கப்பாதை திறப்பு: கோவையிலிருந்து கேரளா செல்வோர் ஹேப்பி!

  கனமழையால் இதுவரை 211 பேர் பலியாகி உள்ள நிலையில், 632 கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக இமாச்சல மாநில அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்காக, 16 இருக்கைகள் கொண்ட தமது ஹெலிகாப்டரை, முதலமைச்சர் ஜெய்ராம் வழங்கியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: