விடிய விடிய கனமழை- தண்ணீரில் மிதக்கும் மும்பை: 20க்கு மேற்பட்டோர் பலி!

கனமழை

கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.  செம்பூரின்  பாரத்நகர் பகுதியில் ஒரு குடியிருப்பு மீது மரம் சாய்ந்து சுவர் மீது விழுந்தது. இதில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில்  நேற்று காலை தொடங்கி கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடா காட்சியளிக்கின்றன. தாழ்வான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வேயின் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.  செம்பூரின்  பாரத்நகர் பகுதியில் ஒரு குடியிருப்பு மீது மரம் சாய்ந்து சுவர் மீது விழுந்தது. இதில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் படிக்க இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்ட சிகோர்ஸ்கி MH-60 Romeo வகை ஹெலிகாப்டரின் சிறப்பு என்ன?




    இதேபோல்,  விக்ரோலி பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் குடியிருப்பு பகுதியின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், 5 பேர் உயிரிழந்தனர், 2 பேர் காயமடைந்துள்ளனர்.  மும்பையில் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை..


    மகாராஷ்டிரா மழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள குறிப்பில், இன்று 6.30 மணி நிலவரப்படி 12 மணி நேரம் பெய்த இடைவிடாது பெய்த மழையால் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 120மி.மி. மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மும்மைக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை அல்லது அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிதீவிர கனமழை என்றால் 24 மணி நேரத்தில் 204.5 மி.மி.க்கு மேல் மழை பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published: