மும்பையில் 3 நாள்களாக கொட்டித் தீர்க்கும் மழை! சுவர் இடிந்து 16 பேர் உயிரிழந்த சோகம்

இதற்கிடையில் மும்பையின் பிம்பிரிபாடா என்ற பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

news18
Updated: July 2, 2019, 11:07 AM IST
மும்பையில் 3 நாள்களாக கொட்டித் தீர்க்கும் மழை! சுவர் இடிந்து 16 பேர் உயிரிழந்த சோகம்
இதற்கிடையில் மும்பையின் பிம்பிரிபாடா என்ற பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
news18
Updated: July 2, 2019, 11:07 AM IST
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இரண்டு வெவ்வேறு இடங்களில் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களுக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதன் காரணமாக, மும்பையில் பெரும்பாலன பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மும்பையில் சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், வெள்ளத்தில் மிதக்கும் மும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில், அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் மழை நீரில் மூழ்கியுள்ளதால், மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மும்பையின் பிம்பிரிபாடா என்ற பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கல்யான் என்ற மற்றொரு இடத்திலும் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. அந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், பால்கார் பகுதியில் 340 மி.மீட்டர் மழையும், தஹானு பகுதியில் 299 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பல பகுதியில் 200 மி.மீட்டருக்கு அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

Also see:

First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...