கொச்சி விமான நிலையம் மூடப்பட்டதால் சென்னையில் தரையிறங்கியது மலேசிய விமானம்!

விமானத்தில் இருந்த பயணிகள் சுங்கத்துறை மற்றும் குடியுரிமை சோதனை செய்யப்பட்டு சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

கொச்சி விமான நிலையம் மூடப்பட்டதால் சென்னையில் தரையிறங்கியது மலேசிய விமானம்!
கொச்சி விமான நிலையம்
  • News18
  • Last Updated: August 9, 2019, 9:26 AM IST
  • Share this:
கேரளா மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மேசியாவில் இருந்து கொச்சிக்கு வந்த விமானம் சென்னையிலேயே தரையிறக்கப்பட்டது. 

கேரளா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து கொச்சி செல்லும் 5 விமானங்களும், அதைப்போல் கொச்சியிலிருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.

இது பற்றி பயணிகளுக்கு தகுந்த நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவற்றை கவனிக்காமல் விமான நிலையம் சில வந்த பயணிகள் மட்டும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனிடையே மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து கொச்சிக்கு 237 பயணிகளுடன் சென்ற விமானம் பலத்த மழை காரணமாக கொச்சியில் தரையிறங்க முடியாமல் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமானத்தில் இருந்த பயணிகள் சுங்கத்துறை மற்றும் குடியுரிமை சோதனை செய்யப்பட்டு சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். கொச்சியில் வானிலை சீரானதும் விமானம் புறப்பட்டு செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.கனமழை தொடர்வதால் கொச்சி விமான நிலையம் வரும் 11-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... கழுத்தளவு தண்ணீரில் சிக்கிய குழந்தையை மீட்ட போலீஸ் எஸ்.ஐ

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading