அசாமில் கனமழை காரணமாக நிலச்சரிவு... 20 பேர் உயிரிழப்பு

அசாமில் கனமழை காரணமாக நிலச்சரிவு... 20 பேர் உயிரிழப்பு
அசாமின் கனமழை (படம்: PTI)
  • Share this:
அசாமில் கடந்த 26ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. அங்கே ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். 

தெற்கு அசாமில் உள்ள பாரக் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த இரு தினங்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்று காலை பெய்த மழையால் பாரக் பள்ளத்தாக்கின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் காக்ஹார் மாவட்டத்தில் 7 பேரும், ஹாயிலாகண்டி மாவட்டத்தில் 7 பேரும் கரிம்கன்ஞ் மாவட்டத்தில் 6 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.









Also see:
 
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading