கனமழை: பீகார், அசாம் மாநிலங்கள் வெள்ளக்காடானது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் தவித்து வரும் மக்கள் படகுகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனமழை: பீகார், அசாம் மாநிலங்கள் வெள்ளக்காடானது
வெள்ள காடாக காட்சியளிக்கும் அசாம்- பீகார்
  • News18
  • Last Updated: July 15, 2019, 10:06 AM IST
  • Share this:
கனமழை மற்றும் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால், அசாம் மற்றும் பீகார் மாநிலங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. நேபாளத்தில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அசாம் மாநிலம், பருவமழையின் காரணமாக மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளம், கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தண்ணீர் என அசாம் மாநிலமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. வெள்ள பாதிப்புகளுக்கு 7 பேர் உயிரிழந்த நிலையில், 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த இடங்களை காலி செய்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

வெள்ளக்காடான காசிரங்கா தேசிய பூங்கா:


புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், வனவிலங்குகள் அனைத்தும் நீரில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தில் தத்தளித்த யானைகள், தலையளவு சூழ்ந்த வெள்ள நீரில், தட்டுத் தடுமாறி நிலத்திற்கு வரும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன

மேலும், அரியவகை மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகளும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தண்ணீர் தேங்கியதால் வனவிலங்குகள் வெள்ளத்தில் நீந்தி மேடான பகுதிக்கு சென்றன.

ஊரைவிட்டுச் செல்லும் கரையோர கிராம மக்கள்:அசாமின் மொரிகான் கிராமத்தை, பிரம்மபுத்திரா நதிநீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். கரையோர கிராமமான மொரிகானில், அணை உடைந்ததால் கிராமத்தை வெள்ளநீர் சூழ்ந்தது. கரைபுரண்டு ஓடி வரும் வெள்ளத்தில் வீடுகள், பொருட்கள் என அனைத்தும் சேதமடைந்துள்ளன. எஞ்சிய உடைமைகளை எடுத்துக்கொண்டு, படகுகளில் அவர்கள் ஊரைவிட்டு வெளியேறுகின்றனர்.

கழுத்தளவு நீரில் நீந்தி தப்பிக்கும் இளைஞர்கள்:

அசாமின் தர்ரங் மாவட்டத்தில், சமையல் அண்டாக்களில் குழந்தைகளை அமரவைத்து, வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி பெற்றோர் அழைத்து வந்தனர். நிலமே கண்ணுக்கு தெரியாத அளவுக்கு போனதால், கிடைத்ததை எல்லாம் படகுகள் போல் பயன்படுத்தி, மக்கள் தப்பித்து வருகின்றனர். சிலர் மூச்சைப் பிடித்துக்கொண்டு கழுத்தளவு நீரில் நீந்தியும் கரை சேர்ந்து வருகின்றனர்.

பீகாரிலும் கனமழை:

பீகாரிலும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அம்மாநில ஃபோர்ப்ஸ்கன்ச் பகுதியில், புதுமண தம்பதிகள், பிளாஸ்டிக் டிரம்களை ஒன்றாக கட்டி, அதன் மீது பலகை ஒன்றை வைத்து, ஆற்றில் பயணித்தனர்.

43 பேர் உயிரிழப்பு:

நேபாளத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். காத்மாண்டுவில் வரலாறு காணாத அளவு பெய்த கனமழையால், நகரமே தனித்தீவு போல மாறியுள்ளது.

படகுகள் மூலம் மீட்பு:

மேலும் காத்மாண்டுவில் 24 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் நேபாள போலீசார் தெரிவித்தனர். வீடுகளில் தவித்து வரும் மக்கள் படகுகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

Also see...ஜெயிலுக்கு அனுப்பிய காதல் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading