Home /News /national /

மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு, சரிந்து விழுந்த ரயில்வே பாலம்.. வெள்ளக்காடான இமாச்சல்

மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு, சரிந்து விழுந்த ரயில்வே பாலம்.. வெள்ளக்காடான இமாச்சல்

இமாச்சல் பிரதேசத்தில் கனமழை வெள்ளம்

இமாச்சல் பிரதேசத்தில் கனமழை வெள்ளம்

அடுத்த சில நாள்களுக்கும் கன மழை தொடரும் அபாயம் உள்ளதால், மாநில பேரிடர் மேலாண்மைத் துறை ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Himachal Pradesh, India
    இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக திடீர் கனமழை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள பாதிப்பில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தின் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று முதல் வட மாநிலங்களான உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

    இதனால் இமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் திடீர் கனமழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளும், சாலைகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும், காங்ரா பள்ளத்தாக்கு அருகே சக்கி நதியின் குறுக்கே ஓடும் ரயில்வே பாலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.


    இந்த கனமழை வெள்ள பாதிப்பை போர் கால அடிப்படையில் எதிர்கொள்ள இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்துள்ள முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், வெள்ள சேதம் குறித்து கணக்கிட்டு விரிவான அறிக்கை தர மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: வீட்டின் உரிமையாளரை கொலை செய்து செல்ஃபி - பீகார் இளைஞர் டெல்லியில் கைது

    அடுத்த சில நாள்களுக்கும் கன மழை தொடரும் அபாயம் உள்ளதால், மாநில பேரிடர் மேலாண்மைத் துறை ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Flood alert, Floods in Himachal Pradesh

    அடுத்த செய்தி