Home /News /national /

திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த 120 எம்எல்ஏக்கள், 17 எம்பிக்கள்!

திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த 120 எம்எல்ஏக்கள், 17 எம்பிக்கள்!

முர்முவுக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த 120 எம்எல்ஏக்கள்

முர்முவுக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த 120 எம்எல்ஏக்கள்

திரௌபதி முர்முவின் வெற்றிக்கு எதிர்க்கட்சியினர் அளித்த வாக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

    நாட்டின் 15 குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக ஆதரவு வேட்பாளர் திரௌபதி முர்மு பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். இதில், 64 சதவீத வாக்குகளை பெற்று முர்மு வெற்றி பெற்றார்.

    இதன் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்திய தேர்தல் ஆணையம் நேற்று இரவு தேர்தல் முடிவுகள் அதன் புள்ளி விவரங்களை முழுமையாக வெளியிட்டன.

    அதன்படி, எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆதரவின்படி பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு 6,76,803 மதிப்பிலான வாக்குகள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 3,80,177 வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் சுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றார்.

    தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரம் படி திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக அணி மாறி 120க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் வாக்களித்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், அவரது வெற்றிக்கு எதிர்க்கட்சியினர் அளித்த வாக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

    அந்த வகையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகளை சேர்ந்த 22 எம்எல்ஏக்களும், மத்திய பிரதேசத்தை 19 எம்எல்ஏக்களும் முர்முவுக்கு வாக்களித்துள்ளனர். மகாராஷ்டிராவில் 16 பேர், உத்தரபிரதேசத்தில் 12 பேர், குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் தலா 10 எம்எல்ஏக்கள் அணி மாறி, முர்முவுக்கு தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். பீகார் மற்றும் சத்தீஸ்கரில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலா 6 எம்எல்ஏக்கள், ராஜஸ்தானில் 5 பேர், கோவாவில் 4 எம்எல்ஏக்களும் முர்முவுக்கு வாக்களித்துள்ளனர்.

    இதுமட்டுமின்றி, மாற்று கட்சிகளை சேர்ந்த 17 எம்.பிக்கள் முர்முவுக்கு தங்கள் வாக்குகளை செலுத்தியிருக்கின்றனர். சிக்கிம், நாகாலாந்து மாநிலங்களில், அனைத்து எம்எல்ஏக்களின் வாக்குகளையும் முர்மு தன்வசப்படுத்தினார்.

    இதையும் படிங்க: காந்தி குடும்பத்தை வைத்து மூன்று நான்கு தலைமுறைக்கு சம்பாதித்துவிட்டோம் - காங்கிரஸ் எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை

    அதேநேரம், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து பெரும்பாலான வாக்குகளை எதிர்க்கட்சி தரப்பில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹா பெற்றார். கேரள மாநிலத்தின் அனைத்து எம்எல்ஏக்களும் சின்ஹாவுக்கு வாக்களித்துள்ளனர்.
    Published by:Yuvaraj V
    First published:

    Tags: President Droupadi Murmu, President Election

    அடுத்த செய்தி