Home /News /national /

ஒடிசா கனமழை: கடந்த 3 நாட்களில் 7 பேர் உயிரிழப்பு..

ஒடிசா கனமழை: கடந்த 3 நாட்களில் 7 பேர் உயிரிழப்பு..

சாலைகளில் ஓடும் மழைநீர்

சாலைகளில் ஓடும் மழைநீர்

ஒடிசா மாநிலத்தில் கனமழை காரணமாக கடந்த 3 நாட்களில் 7 பேர் உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஒடிசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 7 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    அவர்களுக்கு உலர் பழங்கள் மற்றும் சமைத்த உணவு வழங்கப்பட்டதாக ஒடிசா மீட்புப் பிரிவு சிறப்பு ஆணையர் பிரதீப் குமார் ஜேனா தெரிவித்துள்ளார்.



    மேலும், 3 நாட்களில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் 4 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேர் மாயமாகியிருப்பதாகவும் பிரதீப் குமார் கூறினார்.

    மேலும் படிக்க...குத்தகை, வாடகை வீடு தேடுவோரைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..

    இந்நிலையில் பைதராணி மற்றும் பிற ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Odisa

    அடுத்த செய்தி