இடம் கொடுங்கள்: அல்லது கொன்றுவிடுங்கள்: கொரோனா பாதித்த தந்தைக்கு பெட் கிடைக்காமல் கதறும் மகன் -கண்கலங்க வைக்கும் வீடியோ

சீட் கிடைக்காமல் தவிப்பவர்

மகாராஷ்டிராவில் எனது அப்பாவுக்கு மருத்துவமனையில் இடம் கொடுங்கள் அல்லது கொன்று விடுங்கள் என்று இளைஞர் கதறி அழுதுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

 • Share this:
  இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 50,000-த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிகிச்சைக்கான போதிய வசதி இல்லை. ராணுவ உதவி வேண்டும் என்று ஏற்கெனவே அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமருக்கு கோரிக்கைவிடுத்திருந்தார். இந்தநிலையில், கொரோனா பாதித்தவருக்கு சிகிச்சைக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

  மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபுர் பகுதியைச் சேரந்த இளைஞர், கொரோனா பாதித்த அவரது தந்தையை ஆம்புலன்ஸில் வைத்துக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக அழைந்துள்ளார். மும்பையிலிருந்து 850 கி.மீ தூரத்தில் உள்ளது சந்திரபுர். கொரோனாவால் பாதித்து செயற்கை சுவாச உதவியுடன் இருக்கும் அப்பாவை ஆம்புலன்ஸில் வைத்துக்கொண்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அலைந்துள்ளார் அவருக்கு மருத்துவமனை கிடைக்கவில்லை. அதனால் மனமுடைந்த அவர் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

  இதுகுறித்த அவரது வீடியோவில், ‘சந்திரபுரிலுள்ள வரோரா மருத்துவமனைக்கு நான் முதலில் சென்றேன். அதன்பிறகு தனியார் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே பெட் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பின்னர், அங்கிருந்து இரவு 1.30 மணி அளவில் தெலங்கானாவுக்கு கூட்டிச் சென்றோம். 3 மணிக்கு தெலங்கானா மருத்துவமனையை அடைந்தபோது அங்கும் இடம் இல்லை என்று சொல்லிவிட்டனர்.


  பின்னர், மீண்டும் அப்பாவை மகாராஷ்டிராவுக்கு அழைத்து வந்தோம். மீண்டும் இடம் கிடைக்காமல் மருத்துவமனை வாசலில் காத்திருக்கிறோம். ஆம்புலன்ஸிலுள்ள ஆக்ஸிஜன் முடியப் போகிறது. நீங்கள், எனது அப்பாவுக்கு பெட் கொடுங்கள் அல்லது நீங்களே ஊசி போட்டு கொன்றுவிடுங்கள்’ என்று ஆதங்கத்துடன் கதறி அழுது பேசியுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: