ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தொலைதூரத்தில் இருக்கும் கிராமத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று COVID-19 தடுப்பூசி முகாம் நடத்துவதற்காக சில சுகாதார ஊழியர்கள் ஆற்றைக் கடந்து செல்லும் வீடியோவை டிராலா சுகாதார மையத்தின் பொறுப்பாளர் மருத்துவர் இர்ரம் யாஸ்மின் பகிர்ந்துள்ளார்.
நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில், சில சுகாதாரப் பணியாளர்கள், முழங்கால் அளவு தண்ணீர் ஓடும் ஆற்றைக் கடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம், இவர்கள் ஜம்மு காஷ்மீரின் மிகவும் தொலைதூரத்தில் இருக்கும் ராஜோரி கிராமத்தில் தடுப்பூசி முகாம் நடத்தி, அனைவரும் தடுப்பூசி பெறுவதை உறுதிபடுத்த, சுகாதாரப் பணியாளர்கள் அந்த கிராமத்தின் தொலைவையும், நடுவில் இருக்கும் ஆற்றையும் பொருட்படுத்தாமல் தங்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தான். டிராலா சுகாதார மையத்தின் பொறுப்பாளர் டாக்டர் இர்ரம் யாஸ்மின் இவர்கள் ஆற்றைக் கடக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் யாஸ்மின் கூறியதாவது, "ஒவ்வொரு வீடாகச் சென்று கிராம மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுமாறு உயர் அதிகாரிகள் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்" என்று ANI செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
"இது மிகவும் கடினமானது தான், ஆனால் எங்கள் சுகாதார ஊழியர்கள் ஆறுகள், மலைகள் மற்றும் பல தடைகளைக் கடந்து தங்கள் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றினர். தடுப்பூசி போட அவர்கள் மக்களை அணுகினர்" என்றும் அவர் கூறினார். சுகாதார ஊழியர்கள் ஆற்றைக் கடந்து செல்லும் வீடியோ:
#Watch J&K | Health workers cross a river to carry out door-to-door COVID19 vaccination in Rajouri district's Tralla village
(Video Source: Dr Iram Yasmin, In-charge, Tralla Health Centre) pic.twitter.com/884C36ZBhA
— ANI (@ANI) July 10, 2021
கோவிட் தொற்று உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நோயாளிகளைச் சென்றடைவதற்கும் சிகிச்சையை வழங்குவதற்கும் உள்ள சிரமங்களைத் தாண்டி தொற்றுநோய்க்கு எதிரான போரில் சுகாதாரப் பணியாளர்களின் சேவை பாராட்டுக்குரியது. இவர்கள் ஒரு கேடயமாக முன்னணியில் இருந்து மக்களை பாதுகாக்கின்றனர்.
Also Read: பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து எல்.முருகனை நீக்கியது அவருக்கு செய்த அவமதிப்பு - திருமாவளவன் கருத்து!
இதேபோல லடாக் ஆற்றின் குறுக்கே ஒரு எர்த் மூவர் மருத்துவப் பணியாளர்கள் செல்லும் புகைப்படமும் சமீபத்தில் வைரலாகியது. லடாக் அமைச்சர் ஜம்யாங் செரிங் நம்கியால், ஒரு எர்த் மூவரில் மருத்துவப் பணியாளர்கள் செல்லும் படத்தை, ஒரு டிவீட் வழியே பகிர்ந்து, அவர்களை கோவிட் போர்வீரர்கள் என்று பாராட்டியுள்ளார்.
சரியான உள்கட்டமைப்பு இல்லாத போதிலும் நோயாளிகளை அடைய மருத்துவ ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சிகளை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் கடமைகளில் எவ்வாறு சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர் என்பதற்கான மற்றொரு தெளிவான எடுத்துக்காட்டில், ஜார்கண்டில் உள்ள லதேஹரின் மஹுவதன்ர் பிளாக்கில், இளம் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்புத் திட்டத்தை நடத்துவதற்காக மந்தி குமாரி, என்ற ஒரு துணை செவிலியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தன்னுடைய பணியைச் செய்வதற்காக, மந்தி குமாரி, தனது ஒன்றரை வயது மகளை முதுகில் சுமந்துகொண்டு அடர்த்தியான காடுகளில் 35 கிலோமீட்டர் தூரம் பயணித்து, ஆற்றைக் கடக்க வேண்டும். இவரின் தோளில் தடுப்பூசி பெட்டியும் இருக்கும். மந்தி குமாரி எட்டு கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட வேண்டும். மூன்று மாத மகப்பேறு விடுப்பைத் தொடர்ந்து, தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாக அவர் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இது மனதை உண்மையில் நெகிழ வைக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.