முகப்பு /செய்தி /இந்தியா / 7 மாநிலங்களில் தலைதூக்கும் கொரோனா பரவல்: சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

7 மாநிலங்களில் தலைதூக்கும் கொரோனா பரவல்: சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

கொரோனா

கொரோனா

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புகள் குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7 மாநிலங்களில் கொரோனா தொற்று விகிதம் 10 சதவீதத்தை தாண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் ஏழு மாநிலங்களில் வாராந்திர கொரோனா தொற்று விகிதம் 10 சதவீதத்தை தாண்டியதால் சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புகள் குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி, தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாராந்திர கொரோனா தொற்று விகிதம் 10 சதவீதத்தை தாண்டியதால், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், மாநில சுகாதாரத்துறை செயலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மக்களுக்கான தடுப்பூசியின் வேகத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும், அதுமட்டுமில்லாமல் சுகாதார செயல்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று பூஷன் கூறியுள்ளார். மேலும், வரும் மாதங்களில் பல்வேறு பண்டிகைகளுக்கு மக்கள் கூட்டங்களைக் காண வாய்ப்புள்ளது. இது தொற்று பரவுவதைத் தூண்டும் மற்றும் தொற்று, இறப்புகளின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,406-ஆக பதிவாகியுள்ளது மற்றும் 49 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டோரின் விகிதம் 98.50 சதவீதமாக பதிவாகியுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதித்தோரின் தினசரி விகிதம் 4.96 சதவீதமாகவும், வாராந்திர கொரோனா பாதித்தோரின் விகிதம் 4.63 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,34,65,552-ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் தொற்றால் ஏற்பட்ட இறப்பு விகிதம் 1.19 சதவீதம் ஆகும்.

மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 5 பேர், சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 பேர், டெல்லி, குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் திரிபுராவில் தலா 2 பேர், ஹரியானா, கேரளா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் என கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

First published:

Tags: CoronaVirus, Covid-19, Tamil Nadu