Home /News /national /

கொரோனாவை கட்டுப்படுத்துதல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை புதிய அறிவிப்பு... பரபரப்பில் மாநில அரசுகள்

கொரோனாவை கட்டுப்படுத்துதல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை புதிய அறிவிப்பு... பரபரப்பில் மாநில அரசுகள்

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

24 மணிநேரமும் பரிசோதனைக்காக மருத்துவமனைள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவ முகாமிலும், மருத்துவர்கள், பணியாளர்கள் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

    உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இது மூன்றாவது அலை என்று மருத்துவ வல்லுனர்கள் கூறி வரும் நிலையில், உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது.

    ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்ததோ அதேபோன்ற சம்பவங்கள் படிப்படியாக நடக்கத் தொடங்கியுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மும்பையில் நாள் ஒன்றுக்கு 12 மணி நேர ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கும் ஊரடங்கு காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    முன்பு தடுப்பூசி இல்லாத காரணத்தாலும், கொரோனா குறித்த புரிதல் புதிதாக இருந்ததாலும் உலகம் முழுவதும் சுகாதாரத்துறை பெரும் சவாலை சந்தித்தது. தற்போது, தடுப்பூசி, தயார் நிலையில் அனைத்து சேவைகள் என இருப்பதால் இனி எந்த அலை வந்தாலும், எதிர்கொள்ளக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

    Also read:  இந்தியாவில் ஓமைக்ரான் பாதித்த நபர் மாரடைப்பால் மரணம்...

    இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-


    யாராவது காய்ச்சல், தலைவலி, வறட்டு இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், உடல் வலி, சுவை அல்லது வாசனை இழப்பு, வயிற்றுப் போக்கு, மயக்கம் ஆகிய அறிகுறிகளுடன் வரும் நபர்களையும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக கருத வேண்டும்.

    24 மணிநேரமும் பரிசோதனைக்காக மருத்துவமனைள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவ முகாமிலும், மருத்துவர்கள், பணியாளர்கள் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். வீட்டிலேயே பரிசோதனைகளை மேற்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Also read:  இந்தியாவின் ரஃபேலுக்கு பதிலடி கொடுக்க சீனாவிடமிருந்து J-10C ரக போர் விமானங்கள் வாங்கும் பாகிஸ்தான்!
    Published by:Musthak
    First published:

    Tags: Corona, Omicron

    அடுத்த செய்தி