ஹோம் /நியூஸ் /இந்தியா /

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா... இந்தியாவில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த திட்டம்?

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா... இந்தியாவில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த திட்டம்?

கொரோனா

கொரோனா

சீனாவில் கொரோனா மீண்டும் அதிவேகமாக பரவி வருவதால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியது கொரோனா. உலகின் 99 விழுக்காடு நாடுகளில் பரவி பல லட்சம் உயிர்களை காவு வாங்கியது. தொழில்கள் முடங்கி உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டது. கொரோனாவின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சீனாவில் கொரோனா பரவல் தொடங்கிவிட்டது. மே மாதத்தில் இருந்து பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியது. கெரோனா பரவலின் தீவிரத்தால் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர்  மாதங்களில் சீனாவின் முக்கிய நகரங்களில் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் கொதித்தெழுந்த சீன மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதால் கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கிக் கொண்டது சீனா, இதனால் சீனாவில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டு வருகிறது.

சீனாவில் அதிவேகமாக கொரோனா பரவி வருவதால் அண்டை நாடுகள் அச்சமடைந்துள்ளன. குறிப்பாக இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி வருகிறது. அதன் எதிரொலியாக இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா  அதிகாரிகளுடன ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு முக்கியமான சில வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். கொரோனா தொற்று சோதனை செய்து பாசிட்டிவ் என முடிவு வந்தால்அந்த மாதிரிகள் உடனடியாக INSACOG எனப்படும் மத்திய சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பாசிடிவ் மாதிரிகளில்  பரவியிருக்கும் கோவிட் எந்த வகையைச் சேர்ந்தது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த நடவடிக்கை எனக் கூறப்பட்டுள்ளது.

Also Read : தொழிலதிபர் சேகர் ரெட்டியின் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை மரணம்.!

சீனாவைத் தொடர்ந்து ஜப்பான், அமெரிக்கா, கொரியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதுச அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் புதிதாக 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று உள்ளோரின் எண்ணிக்கை 3,490 என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. நேற்று கேரளாவில் இரண்டு பேரும், மஹாராஷ்ட்ராவில் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இப்படி ஒரு இக்கட்டான சூழலில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 2020ஆம் ஆண்டு ஜனவரியில் தான் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியது. மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து, வரப்போகும் 2023  ஆம் ஆண்டு கொரோனாவால் முடக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: China, Corona, CoronaVirus