Home /News /national /

பள்ளிக்கு மாட்டுக்கறி கொண்டுவந்த தலைமை ஆசிரியை கைது..!!

பள்ளிக்கு மாட்டுக்கறி கொண்டுவந்த தலைமை ஆசிரியை கைது..!!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Assam Beef Row: ஆசிரியை மாட்டுக்கறி கொண்டுவந்து உண்டது மட்டுமல்லாது, அதை மற்றவர்களும் உண்ண வேண்டும் என வற்புறுத்தியதால் அவர் மீது புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அசாமில் பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் தனது பள்ளிக்கு மாட்டுக் கறி சமைத்து கொண்டு வந்ததற்காக கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    அசாம் மாநிலம் கோலபாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தலைமையாசிரியை தலிமான் நெசா, இவர் கடந்த வாரம் தனது பள்ளிக்கு மாட்டுக்கறி சமைத்து கொண்டு வந்துள்ளார். இவர் மாட்டுக்கறி கொண்டுவந்ததற்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த ஆசிரியை மே 16ஆம் தேதி அம்மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஆசிரியை மாட்டுக்கறி கொண்டுவந்து உண்டது மட்டுமல்லாது, அதை மற்றவர்களும் உண்ண வேண்டும் என வற்புறுத்தியதால் அவர் மீது புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நடவடிக்கைக்கு சட்ட நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அசாமில் மாட்டுக்கறி உண்ண தடை ஏதும் இல்லை. ஆனால், 2021ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி, இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் பெரும்பாண்மையாக வசிக்கும் பகுதிகளிலும், கோயிலுக்கு 5 கிமீ சுற்றளவிலும் மாட்டுக் கறி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மிரினால் தேகா கூறுகையில், பள்ளியின் நிர்வாக கமிட்டி தலைவர் தலைமை ஆசிரியருக்கு எதிராக புகார் அளித்தார். அதன் பேரில் தான் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார்.

    இதையும் படிங்க: லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை - புதிய வழக்கு பதிவு..

    இந்நிலையில், 56 வயதான அந்த ஆசிரியையை இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி இரு நாள்களில் அறிக்கை சமர்பிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருக்கும் அந்த பெண், இன்னும் 4 ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Assam, Beef, School Teacher

    அடுத்த செய்தி