ஹோம் /நியூஸ் /இந்தியா /

தலைக்கேறிய மதுபோதை.. லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்த தலைமை ஆசிரியர்.. தர்ம அடி கொடுத்த மாணவிகள்!

தலைக்கேறிய மதுபோதை.. லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்த தலைமை ஆசிரியர்.. தர்ம அடி கொடுத்த மாணவிகள்!

விடுதியில் நுழைந்த தலைமையாசிரியர்

விடுதியில் நுழைந்த தலைமையாசிரியர்

விடுதிக்குள் நுழைந்த ஆசிரியர் உறங்கிக் கொண்டிருந்த மாணவியிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karnataka, India

பெண்கள் விடுதியில் நுழைந்த தலைமையாசிரியரை மாணவிகள் தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

கர்நாடகா மாநிலம் ஸ்ரீரங்கட்டனா அருகே உள்ள கட்டேரிகிராமத்தில் அரசுப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியின் தலைமையாசிரியர் சின்மயானந்த் மூர்த்தி, பள்ளி வளாகத்தில் உள்ள மாணவிகள் விடுதிக்கு அருகே உள்ள அறையில் தங்கியிருந்து வேலைபார்த்து வந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு நேரத்தில் மதுபோதையில் மாணவிகள் விடுதிக்குள் நுழைந்த சின்மயானந்த் மூர்த்தி, உறங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. அதில் பாதிக்கப்பட்ட மாணவி, சக தோழிகளிடம் சம்பவம் குறித்து தெரிவிக்க, விடுதி மாணவிகள், ஒன்று கூடி தலைமையாசிரியரை அடித்து உதைத்தனர்.

இதையும் படிங்க ; கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்வு... பீகாரில் பரபரப்பு

 

மேலும் அவரை விடுதியிலேயே கட்டிவைத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Karnataka