ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம். இணையதளத்தில் நேரலை செய்ய ஏற்பாடு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்ப்பு. பல்வேறு பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
இன்று மாலை நடைபெறுகிறது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம். சட்டப்பேரவையில் செயல்படுவது குறித்து ஆலோசிக்க திட்டம்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் விநியோகம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் உற்சாகமாக நடைபெற்றது ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு.
'தமிழ்நாடு' குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம். ஆர்.என்.ரவி ஆளுநரா? அல்லது ஆர்.எஸ்.எஸ். தொண்டரா? என திருமாவளவன் காட்டம்
தமிழ்நாட்டை தமிழகம் என்றும் அழைக்கலாம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவையில் பேட்டி. சங்க இலக்கியங்களில் தமிழகம் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்ததாகவும் விளக்கம்
என்எல்சி நிறுவனத்துக்கு ஒரு பிடி மண்ணைக் கூட தரமாட்டோம். கடலூர் நடைபயண நிறைவு நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி திட்டவட்டம்
திருவண்ணாமலை அருகே போலீசாரை அவதூறாக பேசிய விசிக நிர்வாகி கைது. கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திய தொண்டர்கள், போலீசாருடன் தள்ளுமுள்ளு
பொங்கலுக்கு புத்தாடை வாங்க சென்னை தியாகராய நகரில் குவிந்த மக்கள். கட்டுக்கடங்காத கூட்டத்தால் திணறிய ரங்கநாதன் தெரு
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம். ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் அறிவிப்பு
நாமக்கல் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி உயிரிழப்பு. கொசுக்களைக் கட்டுப்படுத்தி டெங்கு அச்சத்தை போக்க வேண்டும் என கோரிக்கை
கோவை - பல்லடத்தை இணைக்கும் சாலைக்கு நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படும். அருட்செல்வரின் நூற்றாண்டு மலரை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோவை - பல்லடத்தை இணைக்கும் சாலைக்கு நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படும். அருட்செல்வரின் நூற்றாண்டு மலரை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கடுங்குளிர் நிலவுவதால் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 5 வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட். பனிமூட்டத்தால் விமானங்கள், ரயில்கள் தாமதமாக இயக்கம்.
உத்தராகண்டின் ஜோஷிமத் நகரில் விரிசலால் பாதிக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு. முதல்வர் புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார் பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் கல்வீச்சு. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை என தகவல்..
சர்வதேச பட்டம் விடும் திருவிழா குஜராத்தின் அகமதாபாத்தில் தொடக்கம். மலேசியா, சீனா உள்ளிட்ட 44 நாடுகளில் இருந்து 150 வீரர்கள் பங்கேற்பு
புத்தாண்டை ஒட்டி சீனாவில் சொந்த ஊர்களுக்கு பயணத்தை தொடங்கிய மக்கள். 40 நாட்களில் 200 கோடி பேர் இடம்பெயற வாய்ப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Headlines