தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அதிகாலை முதலே மசூதிகளில் முஸ்லீம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பே இல்லை என்று மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி வரும் 16-ஆம் தேதி முதல் 6 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஜெர்மனி இடையேயான பசுமை மற்றும் நீடித்த எரிசக்தி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் நரேந்திர மோடியும், ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கால்ஸும் கையெழுத்திட்டனர்
அக்ஷய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில், நகைக்கடைகளில் விதவிதமான நகைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் பெட்ரோல் குண்டுவீச்சில் படுகாயமடைந்த வீட்டுக் காவலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சேலத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மாணவிகள் மோதிக் கொண்ட விவகாரம் தொடர்பாக மாநகராட்சி கல்வி அலுவலர் தலைமையில் தொடர்புடைய பள்ளிகளில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரியில் ரம்ஜான் தொழுகை நடத்துவதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், காவல் நிலையம் முன்பு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கன்னியாகுமரி மாவட்டத்தில் மர மில் உரிமையாளரை மிரட்டி லஞ்சம் வாங்கிய சிசிடிவி காட்சி வெளியான நிலையில், வனச்சரக ஊழியர்கள் இருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தாலே அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது என்று, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை திரிகோணமலைப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேரை படகுடன் இந்திய கடற்படையினர் கைதுசெய்தனர்.
தேசிய அளவிலான சீனியர் மகளிர் ஹாக்கிப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள தமிழக வீராங்கனைகளுக்கு திமுக எம்.பி., கனிமொழி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
மாமல்லபுரத்தில், நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 6 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்திய அணியின் ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் நிலையில், அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசை ஏற்படுத்த ஆளும் பொதுஜன பெரமுனா கட்சி ஒப்புக் கொண்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கொல்கத்தா அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Akshaya Tritiya, Headlines, IPL, Modi, Ramzan, Tamil News