முகப்பு /செய்தி /இந்தியா / சாவின் விளிம்பில் அம்மா.. வீடியோ காலில் பாட்டு பாடிய மகன்: மருத்துவர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

சாவின் விளிம்பில் அம்மா.. வீடியோ காலில் பாட்டு பாடிய மகன்: மருத்துவர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

வீடியோ காலில் பாட்டு பாடிய மகன்

வீடியோ காலில் பாட்டு பாடிய மகன்

நானும், செவிலியர்களும் இறுக்கமான மனதுடன் நின்றபடியே இருந்தோம், எங்கள் கண்கள் குளமாகின, பின்னர் செவிலியர்கள் ஒவ்வொருவராக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நோயாளிகளை பராமரிக்க சென்றனர்.

  • Last Updated :

கொரோனா பெருந்தொற்றால் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அன்புக்குரியவர்களை இழந்து தவிப்பவர்கள் அதிகமாகிவிட்டனர். மரணப்படுக்கையில் சாவின் விளிம்பில் சென்றாலும் கூட அவர்களை அருகில் இருந்து அன்பையும், ஆதரவையும், தைரியத்தையும் கொடுக்க நம்மால் இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது தான் கொரோனா வைரஸ் நோயின் கோரமுகமாக இருக்கிறது.

கொரோனா தொற்றால் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என அனைத்துமாக இருப்பதும் மருத்துவர்களும், செவிலியர்களும் மட்டுமே. அவர்கள் தான் நோயாளிகளுக்கு ஒரே ஊக்கம் தரும் சக்தியாகவும், மரணப்படுக்கையில் இருப்போருக்கு கடைசி ஒளியாகவும் இருக்கிறார்கள்.

மருத்துவர்களும், செவிலியர்களும் தினந்தோறும் இப்படியான இறுக்கமான சூழலில் தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு இறுக்கமான சூழலில் கொரோனா வார்டில் பணியாற்றிய பொது தான் சந்தித்த நெஞ்சை பிழியும் சோகத்தை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் பெண் மருத்துவர் ஒருவர்

திப்ஷிகா கோஷ் என்ற அந்த அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர், மரணப் படுக்கையில் இருந்த அம்மாவிடம் பேச வேண்டும் என தெரிவித்த மகனுக்காக எனது மொபைலில் இருந்து வீடியோ கால் செய்து தந்தேன், அவர் நிச்சயம் பிழைக்கமாட்டார் என்ற நிலையில் அதனை புரிந்து கொண்ட மகனும் வீடியோ காலில் தாய் - மகன் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு இந்தி பாடலை கண்ணீருடன் உணர்ச்சிவசமாக பாடினார் எனவும் அதனை நானும், செவிலியர்களும் மிகவும் இறுக்கமான சூழலில் அமைதியாக பார்த்ததாகவும் கூறியிருப்பது நெஞ்சை பிழியும் சோகத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

மருத்துவர் திப்ஷிகா கோஷ் ட்விட்டர் த்ரெட்டில் பகிர்ந்துள்ளதாவது, “இன்று எனது ஷிப்ட் முடியும் நேரத்தில் என்னிடம் சிகிச்சையில் இருந்த பெண் ஒருவர் உயிரிழக்கப்போகும் தருவாயில் இருக்கிறார் என்பதை அவருடைய உறவினரிடம் தெரிவித்தேன். இது நாங்கள் வழக்கமாக செய்யக்கூடிய செயல் தான். இறுதியாக ஏதாவது பேச வேண்டுமா என நான் கேட்டேன், அப்போது தாயிடம் பேசுவதற்காக போனை வாங்கிய அவரது மகன் ‘Tera Mujhse Hai Pehle Ka Nata Koi’ என்ற இந்தி பாடலை (பல ஆண்டுகளாக தாயை பிரிந்த மகன் ஒருவர் பாடும் பாடல்) பாடத் தொடங்கினார். போனை பிடித்துக் கொண்டு, தாயையும், மகனையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த அறைக்கு செவிலியர்கள் அனைவரும் வந்து அமைதியுடன் நின்றனர்.

பாடலை பாடிக்கொண்டிருந்த மகன் ஒரு கட்டத்தில் அழுதார், இருப்பினும் அந்த பாடலை முழுமையாக அவர் பாடி முடித்தார். தனது அம்மாவின் மருத்துவ குறிப்புகள் குறித்து கேட்டுவிட்டு என்னிடம் நன்றி தெரிவித்து போனை வைத்துவிட்டார்.

நானும், செவிலியர்களும் இறுக்கமான மனதுடன் நின்றபடியே இருந்தோம், எங்கள் கண்கள் குளமாகின, பின்னர் செவிலியர்கள் ஒவ்வொருவராக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நோயாளிகளை பராமரிக்க சென்றனர். அந்த பாட்டு எங்களை அசைத்துப் பார்த்துவிட்டது.

உரிய அனுமதியுடன் அந்த தாயின் பெயர் சங்கமித்ரா சட்டர்ஜி, மகனின் பெயர் சோஹம் சட்டர்ஜி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனது ஆழ்ந்த இரங்கல். நீங்கள், உங்கள் குரல், உங்கள் அமைதியான கண்ணியம், இதுவே உங்கள் தாயின் சொத்து” இவ்வாறு அந்த பெண் மருத்துவர் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டரில் ஆயிரக்கணக்கானவர்களால் பகிரப்பட்டு வரும் இந்த பதிவு மக்களின் மனதை ரனமாக்கியுள்ளது என்றே கூறலாம்.

First published:

Tags: Corona, COVID-19 Second Wave