நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் டிஜிட்டல் சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளது. நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் புகார் தெரிவிக்கின்றனர். ஹோலி பண்டிகை, நிதி ஆண்டு முடிவு, வங்கி கணக்கு முடிவு, என மார்ச் 27-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 4-ம் தேதி வரை பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் விடுமுறையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் ஆன்லைன் சேவைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் வாடிக்கையாளர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
Some customers are facing intermittent issues accessing our NetBanking/MobileBanking App. We are looking into it on priority for resolution. We apologize for the inconvenience and request you to try again after sometime. Thank you.
’ஹெச்டிஎஃப்சி நாட் பேங்கிங் ’என ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்கள். ஹெச்டிஎஃப்சி வங்கியை ட்விட்டரில் டேக் செய்து தாங்கள் எதிர்க்கொள்ளும் பிரச்னை குறித்து பதிவிட்டுள்ளனர். இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ஹெச்டிஎஃப்சி வங்கி, ’ எங்கள் வாடிக்கையாளர்கள் சிலர் நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் சேவையை பயன்படுத்தும் போது சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதற்கான தீர்வுகளை பெற முயற்சித்து வருகிறோம். சிரமத்துக்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். வாடிக்கையாளர்கள் சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளது.