ஒரு எம்.எல்.ஏவுக்கு 100 கோடி: பேரம் பேசிய பாஜக?

news18
Updated: May 16, 2018, 2:26 PM IST
ஒரு எம்.எல்.ஏவுக்கு 100 கோடி: பேரம் பேசிய பாஜக?
குமாரசாமி
news18
Updated: May 16, 2018, 2:26 PM IST
கர்நாடக தேர்தல் முடிவுகளை அடுத்து ம.ஜ.தவின் எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிப்பதாக குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. இதனால் 38 இடங்களை பெற்ற ம.ஜ.த.வுக்கு ஆதரவு அளித்து கூட்டணி ஆட்சி அமைக்க 78 இடங்களை வென்ற  காங்கிரஸ் முடிவு செய்தது. ம.ஜ.த. சார்பில் காங்கிரசின் முடிவுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் 104 இடங்களை பெற்ற பாஜக ஆட்சியமைக்க, ம.ஜ.த. ஆதரவு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ்  ஜவுடேகர்,  குமாரசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஆனால் எம்.எல்.ஏக்களுடனான கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் தான் கூட்டணி என குமாரசாமி திட்டவட்டமாக  தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி   ம.ஜ.தவின் எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். இது குறித்து பேசிய அவர் “கருப்பு பணத்தை ஒழிப்பதை பற்றி  பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் பாஜக ரூ.100 கோடி பணத்தையும்  பதவிகளையும் தர உள்ளதாக எங்கள் ம.ஜ.த. எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசுகிறது. இந்த 100 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், பாஜகவிடம் ம.ஜ.த எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்க தேவையான பணம் இருக்கிறது. ஆனால் மக்களின் வங்கி கணக்கில் போடுவதாக சொன்ன 15 லட்சம் ரூபாய் என்னவாயிற்று எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இந்நிலையில் மத்தியில் ஆளும் அதிகாரத்தை பாஜக பயன்படுத்துகிறது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் 100 கோடி பேரம் பேசவில்லையென பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்