ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நேரம் கிடைப்பதில்லை- தேவகவுடா வேதனை

நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நேரம் கிடைப்பதில்லை- தேவகவுடா வேதனை

தேவகவுடா

தேவகவுடா

நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நேரம் கிடைப்பதில்லை என்று ராஜ்ய சபா எம்.பி தேவகவுடா வேதனை தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 7-ம் தேதி 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விடுமுறை தினங்கள் தவிர்த்து மொத்தம் 17 நாட்கள் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இன்றைய கூட்டத் தொடரின்போது மாநிலங்களவையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.பியும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேசினார்.

அப்போது அவர், ‘கடந்த 20 வருடங்களில் நாடாளுமன்றத்தில் கசப்பான அனுபவம் கொண்ட ஒரு உறுப்பினர் நான் மட்டும்தான். இங்கே பேசுவதற்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமானது. இரண்டு அவைகளிலும் ஒரு உறுப்பினருக்கு 2-3 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்படுகிறது. அது கடினமான அனுபவமாக இருக்கிறது. இரு அவைகளின் சபாநாயகர்களும் உறுப்பினர்கள் பேசுவதற்கு கூடுதலான நேரம் வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஒரு விவசாயியாக இருப்பதாலும், இந்தியாவின் கிராமப் பகுதியிலிருந்து வருவதாலும் விவசாயம் தொடர்பான பிரச்னைகளை பேசுவதற்கு நான் அதிக நேரம் என்று எடுத்து கொள்வேன்’ என்று தெரிவித்தார்.

முன்னதாக இந்தக் கூட்டத் தொடரில் பேசிய பிரதமர் மோடி, ‘எல்லா கட்சிகளையும் சேர்ந்த எம்.பிகளிடம் நான் இயல்பாக பேசும்போது அவர்களால் நாடாளுமன்ற கூட்டத் தொடர் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்படுவதால் அவர்களால் எதுவும் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றனர்’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: HD Deve Gowda