செப்டம்பர் ஒன்றாம்தேதி முதல் தெலங்கானாவில் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்திருந்த நிலையில் அம்மாநில உயர் நீதிமன்றம் இதற்கு தடை விதித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய கல்வி நிலையங்களை திறக்க தொடங்கியுள்ளன. தமிழகத்தில் நாளை முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்படவுள்ளன. இதேபோல் நாளை முதல் கல்லூரிகளும் திறக்கப்படவுள்ளது.
தமிழகத்தை போன்று தெலங்கானா மாநிலத்திலும் நாளை முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்திருந்தது. 8 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த தெலங்கானா உயர் நீதிமன்றம், பள்ளிகள் திறப்பு உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருவது அவசியம் இல்லை என்றும் பள்ளிக்கு வரும்படி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளது. பள்ளிக்கு வராத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்க எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்!
ஆன்லைன் கல்வியை தொடரலாமா அல்லது மாணவர்களை வகுப்புக்கு வரவழைத்து பாடம் நடத்தலாமா என்பதை கல்வி நிலையங்களை முடிவு செய்துகொள்ளலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆஃப்லைன் வகுப்புகளை நடத்தாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் அரசுக்கு அது கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: கட்டாய மதமாற்றச் சட்டம் விரைவில் அமலுக்கு வரும் - ஹரியானா முதல்வர்
இது தொடர்பாக அடுத்த வாரத்தில் நெறிமுறைகளை அடுத்த வாரத்தில் வெளியிட அம்மாநில கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், மாநிலம் முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையைஅக்டோபர் 4 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: High court, School, Telangana