Home /News /national /

குடும்ப வாழ்க்கையை தொடங்க 'நல்ல நேரம்' அமையவில்லை என 11 ஆண்டுகளாக கணவரை காக்க வைத்த மனைவி - பரபரப்பு வழக்கு

குடும்ப வாழ்க்கையை தொடங்க 'நல்ல நேரம்' அமையவில்லை என 11 ஆண்டுகளாக கணவரை காக்க வைத்த மனைவி - பரபரப்பு வழக்கு

marriage

marriage

தம்பதியர் இருவருக்கும் கடந்த 8.7.2010ல் திருமணம் நடந்துள்ளது. இருவரும் கணவன் - மனைவியாக 11 நாட்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்திருக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    குடும்ப வாழ்க்கையை தொடங்க நல்ல நேரம் அமையவில்லை என கணவரை 11 ஆண்டுகள் மனைவி காக்க வைத்திருந்ததால் கணவரின் விவாகரத்து வழக்கை ஏற்று, உயர்நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது.

    சட்டீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் வழக்கத்திற்கு மாறான ஒரு விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் திருமணம் ஆன புதிதில் இருந்து குடும்ப வாழ்க்கையை தொடங்க நல்ல நேரம் அமையவில்லை எனக் கூறி மனைவி தன்னை விட்டு 11 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என தொடர்ந்த வழக்கை குடும்ப நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் விவாகரத்து கோரி கணவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக முறையிட்டிருந்தார்.

    தம்பதியர் இருவருக்கும் கடந்த 8.7.2010ல் திருமணம் நடந்துள்ளது. இருவரும் கணவன் - மனைவியாக 11 நாட்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்திருக்கின்றனர். அதன் பிறகு முக்கியமான வேலை விஷயமாக அவருடைய மனைவியை அவரின் பெற்றோர் அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால் அதன் பின்னர் அவர் ஒருபோதும் கணவரின் வீட்டுக்கு திரும்பவில்லை.

    Also read:  பிரதமர் பாதுகாப்பில் குளருபடி: பஞ்சாப் அரசுக்கு காங்கிரஸ் தலைவர் கண்டனம்

    4.8.2010 மற்றும் 14.10.2010 ஆகிய இரு தினங்களில் அவர் தனது மனைவியை அழைத்துவர அவரின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். இருப்பினும் தற்போது குடும்ப வாழ்க்கையை தொடங்க நல்ல நேரம் அமையவில்லை என கூறி அவரை அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் அவர் தனது மனைவியை அழைக்க செல்லவில்லை, தனது மனைவி அவராகவே தனது வீட்டுக்கு திரும்பி வரவில்லை என கணவர் கூறினார்.

    திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான விண்ணப்பம் மூலம் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் முறையிட்ட போதும் அரசுப் பணிகளை காரணம் காட்டி அவரின் மனைவி ஆஜராகாமல் தவிர்த்து வந்துள்ளார்.

    Also read:  11 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட முதியவர் - எப்படி சாத்தியம்?

    இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. விசாரணையின் போது தான் தற்போதும் தனது கணவருடன் செல்ல தயாராக இருக்கிறேன், ஆனால் நல்ல நேரம் காரணமாகவே தனது கணவருடன் குடும்ப வாழ்க்கையை தொடங்க காலதாமதம் செய்ததாக மனைவி தரப்பில் கூறப்பட்டது.

    இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் நல்ல நேரம் என்பதே மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்காகத் தான். ஆனால் இங்கு மனைவியோ நல்ல நேரத்தை காரணம் காட்டி 11 ஆண்டுகளை வீணடித்திருக்கிறார். ஆதாரங்களின் அடிப்படையில் மனைவி, கணவருடன் செல்ல விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. மேலும், கணவர் தனது குடும்ப வாழ்க்கையை மீட்டெடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார், ஆனால் அதற்கு மனைவி ஒத்துழைக்கவில்லை. எனவே கணவரின் மனுவை ஏற்று இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுகிறது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Divorce, Husband Wife

    அடுத்த செய்தி