• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் JNU மாணவிக்குப் பிணை வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் JNU மாணவிக்குப் பிணை வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்

தேவங்கனா காலிதா.

தேவங்கனா காலிதா.

வடகிழக்கு டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் JNU மாணவிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று காலை பிணை வழங்கியது.

  • Share this:
    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செயல்படும் பிஞ்ராதோட் எனும் பெண்கள் அமைப்பின் உறுப்பினர்களுள் ஒருவரான தேவங்கனா காலிதாவுக்கு டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் 53 பேர் உயிரிழந்தனர். சுமார் 200 பேர் படுகாயமடைந்தனர். மாணவி தேவங்கனா காலிதா வடகிழக்கு டெல்லியிலுள்ள ஜாஃப்ராபாத் பகுதியில் சிஏஏ-வுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தவர்களை வன்முறைக்குத் தூண்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, அதனடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    Also read: சுங்கக் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் - மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவரின் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார். காலிதாவுக்குப் பிணை வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிபதி சுரேஷ் குமார் கைத் அமர்வு அவருக்குப் பிணை வழங்கியுள்ளது. காலிதா வன்முறையைத் தூண்டியதற்கான எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறிய நீதிபதி சுரேஷ் குமார், அமைதியான முறையில் போராடுவது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமை என்று தெரிவித்தார்.



    பழைய டெல்லி தர்யாகஞ் (Daryaganj) பகுதியில் டிசம்பர் மாதம் நடந்த வன்முறை தொடர்பாக கடந்த மே 30ம் தேதி காலிதா கைது செய்யப்பட்டிருந்தார். அதிலும் இவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் மீது இருக்கும் நான்கு வழக்குகளில் இரண்டில் பிணை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: