• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பா.ஜ.க தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து 4 வாரத்தில் பதில் அளிக்கவேண்டும்! மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

பா.ஜ.க தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து 4 வாரத்தில் பதில் அளிக்கவேண்டும்! மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி உயர் நீதிமன்றம்

  • Share this:
    டெல்லியில் வன்முறையைத் தூண்டும்விதமாக பேசிய பா.ஜ.க தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து ஏப்ரல் 13-ம் தேதிக்குள் பிரமானப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடக்கு டெல்லியில் மௌஜ்பூர் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும் ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், பிப்ரவரி 24-ம் தேதி இருதரப்பினருக்கும் இடையே வன்முறையை ஏற்பட்டது. தொடர்ந்து இரு தினங்களுக்கு நீடித்த இந்த வன்முறையின் காரணமாக குடியிருப்பு பகுதிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கடைகள், கார்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்தின் காரணமாக ஒரு காவலர் உள்பட இதுவரையில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    பா.ஜ.க தலைவர்கள் பேசிய வெறுப்பு பேச்சின் காரணமாகவே வன்முறை ஏற்பட்டது என்று குற்றம்சாட்டம் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ‘வெறுப்பு பேச்சு பேசியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு இது சரியான நேரம் கிடையாது. இதுவரையில் காவல்துறையினர் 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்று 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பா.ஜ.க தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ’குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் அமைதியான வழியில்தான் சென்றுகொண்டிருந்தது. மக்களைக் கொல்லுங்கள் என்பன போன்ற வெறுப்பு பேச்சின் காரணமாக வன்முறை வெடித்தது.

    வன்முறையின்போது கோலி மாரோ என்ற வார்த்தை முக்கியச் சொல்லாக இருந்துள்ளது. வன்முறைப் பேச்சை பேசியவர்கள் எத்தனை உயர்ந்த பதவியில் இருந்தால் அவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யவேண்டும்’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘பா.ஜ.க தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக மத்திய அரசு நான்கு வாரத்துக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    முன்னதாக நேற்று டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வெறுப்பு பேச்சால் வன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் அனுராக் தாகுர், கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் நேற்று இரவு பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: