பாட்டியை போல மூக்கு இருந்தால் மட்டும் பவர் கிடைக்காது: மத்திய அமைச்சர் கிண்டல்!

கடந்த மாதம் பாஜக எம்.பி., ஹரிஷ் திவேதி, டெல்லியில் ஜீன்ஸ் அணிந்து வலம் வந்து கொண்டிருந்த பிரியங்கா காந்தி, தேர்தல் பிரசாரத்தின் போது மட்டும் புடவை அணிந்து செல்கிறார் என விமர்சித்திருந்தார்.

news18
Updated: March 27, 2019, 11:02 AM IST
பாட்டியை போல மூக்கு இருந்தால் மட்டும் பவர் கிடைக்காது: மத்திய அமைச்சர் கிண்டல்!
பிரியங்கா காந்தி
news18
Updated: March 27, 2019, 11:02 AM IST
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை போல மூக்கு இருந்தால் மட்டும் பிரியங்கா காந்தியால் வெற்றி பெற்றுவிட முடியாது என பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கிண்டலடித்துள்ளார்.

கிழக்கு உத்தரபிரதேசத்துக்கான அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள பிரியங்கா காந்தி, வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, உத்தரப்பிரதேசத்தில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரியங்கா காந்தியின் முகத்தோற்றம், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முகச் சாயலாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியில் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

மக்களின் மத்தியில் இந்திரா காந்தியின் பெயரைச் சொல்லி வாக்குகளைச் சேகரிக்க காங்கிரஸ் கட்சி பார்க்கின்றது என விமர்சித்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திரா காந்தியை போல மூக்கு இருந்தால் மட்டும் பிரியங்கா காந்தியால் வெற்றி பெற முடியாது என கூறினார்.

கடந்த மாதம் பாஜக எம்.பி., ஹரிஷ் திவேதி, டெல்லியில் ஜீன்ஸ் அணிந்து வலம் வந்து கொண்டிருந்த பிரியங்கா காந்தி, தேர்தல் பிரசாரத்தின் போது மட்டும் புடவை அணிந்து செல்கிறார் என விமர்சித்திருந்தார்.

Also See..

First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...