Home /News /national /

தண்ணீரில் மிதக்கும் ஓவியம் பற்றித் தெரியுமா?.. ஜல் சஞ்சி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

தண்ணீரில் மிதக்கும் ஓவியம் பற்றித் தெரியுமா?.. ஜல் சஞ்சி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

jal sanjhi

jal sanjhi

Jal sanjhi: 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்த அரிய கலையை உதய்பூரில் உள்ள சில குடும்பங்கள், தலைமுறை தலைமுறையாக கடைப்பிடித்து வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Udaipur, India
கோலத்தில் லேசாக தண்ணீர் பட்டாலே கலைந்து அழிந்துவிடும். ஆனால் தண்ணீர் மேலேயே கோலம் போடுகிறார்கள் என்றால் நம்புவீர்களா? இது ஏதோ மாயாஜால மந்திர வித்தை அல்லது கிராபிக்ஸ் இல்லை. உண்மையிலேயே கண்ணனை போற்றி  தண்ணீர் மேல் கோலத்தை போடுகிறார்கள்.

உதய்பூரில் தான் இந்த ஓவியங்கள் வரையப்படுகிறது. உதய்பூர் ஏரிகள் மற்றும் அதன் இயற்கை அழகால் சூழ்ந்த  பழைய நகரம். உதய்பூரின் தனித்துவமான பல்வேறு கலை வடிவங்களின் மையமாகும். உள்ளூர் கலைஞர்கள் தங்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தைப் பின்பற்றி இந்த ஓவியங்களையும் சிற்பங்களையும் உருவாக்குகிறார்கள்.

அத்தகைய ஒரு கலை வடிவம் தான் இந்த 'சஞ்சி' எனப்படும் கலை. ஒரு ஓவியத்திற்கான கேன்வாஸ் என்பது துணி அல்லது காகிதம் ஆகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. அது சுத்த நீராகக் கூட இருக்கலாம். அப்படி நீரில் வரையும் ஓவியத்திற்கு ‘ ஜல் சஞ்சி’ என்று பெயர்.

வெளிநாடுகளை போல் சென்னை விமான நிலையத்திலும் பயணிகள் ஓய்வு எடுக்க ‘குட்டி அறைகள்’

அஸ்வினி நட்சத்திர அமாவாசை வரை பதினைந்து நாட்களுக்கு சாஞ்சி ஓவியங்கள் வரையும் வழக்கம் இருந்து வருகிறது. பாத்ரபத பூர்ணிமா அன்று இந்த ஓவியத்திற்கான தயாரிப்புகள் தொடங்கும். பாத்ரபத பூர்ணிமா என்பது இந்து முறை நாட்காட்டியின் பாத்ரபத மாதத்தில் வரும் பௌர்ணமியை குறிக்கும். அன்று திருமாலின் நாராயண வடிவத்தை வைத்து வழிபடுவர். அன்று தொடங்கு அமாவாசை வரை இந்த ஓவியங்கள் வரையப்படும்.

உருவான கதை..

ஒரு புராணக்கதைபடி, இந்த ஓவியங்கள் கிருஷ்ணரின் உருவத்தை ஒரு குளத்தில் 'ராதை' தண்ணீரில் பார்த்தபோது தோன்றின. இறைவனின் படத்தை தண்ணீரில் பூக்களால் உருவாக்கினர். பின்னர் பொடிகளால் உருவாக்கி வருகின்றனர். அப்போதிருந்து, இது சஞ்சியாக உருவானது, இது கிருஷ்ணரின் லீலாவைக் கௌரவிக்கும் வகையில் நீர் மீது சித்திரச் வடிவத்தில் உருவாக்கப்படுகிறது.



300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்த அரிய கலையை உதய்பூரில் உள்ள சில குடும்பங்கள், தலைமுறை தலைமுறையாக கடைப்பிடித்து வருகிறது. இந்த கலை மதுராவில் தொடங்கப்பட்டதாக சொல்கின்றனர்.

உருவாகும் முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முந்தினம் இரவு தனியாக ஒரு இடத்தில வைத்து விடுவார். கற்களை அரைத்து இதற்கென தனித்துவமான பொடிகள் உருவாக்க படுகிறது. ஓவியம் வரைவதற்கு முன் அடிப்படை நிறத்தைக் கொண்டு முதலில் ஒரு அடுக்கு பொடியை தூவுகின்றனர்.



பின்னர் கிருஷ்ணரின் வாழ்க்கை கதைகளை வைத்து ஓவியங்கள் வரைந்து தனி தனி நிறங்களுக்கான ஸ்டென்சில்கள் தயாரித்து பராமரிக்கப்படுகிறது. பாரம்பரியமான முறையில் தயாரிக்கப்படும் அரிசியில் செய்யப்பட்ட காகித ஸ்டென்சில்களை பயன்படுத்துகின்றனர் . ஒவ்வொரு அடுக்காக ஸ்டென்சில் பயன்படுத்தி நிறங்கள் தூவி ஓவியங்களை உருவாக்குகின்றனர்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Painting, Rajastan

அடுத்த செய்தி