என்னைப்பற்றி வரும் மீம்ஸ்களை பார்த்து சந்தோஷப்படுவேன் - அக்‌ஷய் குமார் நேர்காணலில் மோடி தகவல்

"எனக்கு கோபம் வராததை கண்டு மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். கோபம் வரும் சூழலை நான் ஏற்படுத்திக்கொள்வது இல்லை”

என்னைப்பற்றி வரும் மீம்ஸ்களை பார்த்து சந்தோஷப்படுவேன் - அக்‌ஷய் குமார் நேர்காணலில் மோடி தகவல்
அக்‌ஷய் குமார் நேர்காணலில் மோடி
  • News18
  • Last Updated: April 24, 2019, 9:58 AM IST
  • Share this:
பிரதமர் மோடியுடன் அரசியல் அல்லாத நேர்காணலை நடிகர் அக்‌ஷய் குமார் நடத்தியுள்ளார். இதில், பல கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அரசியல் அல்லாத கேள்விகள் கொண்ட நேர்காணலை பிரதமர் மோடியுடன் நடிகர் அக்‌ஷய் குமார் நடத்தியுள்ளார்.

மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை, தாயார், ஒபாமா, என்று பல தரப்பட்ட கேள்விகளை அக்‌ஷய் குமார் மோடியிடம் கேட்டுள்ளார்.


இந்த நேர்காணல் தற்போது நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நேர்காணலில், “நான் பிரதமர் ஆக வேண்டும் என்று நினைத்ததே இல்லை, சன்னியாசியாக வேண்டும் என்று நினைத்துள்ளேன்” என்று மோடி கூறினார்.

எம்.எல்.ஏ ஆகும் முன் வரை தனக்கு வங்கிக்கணக்கு இல்லை என்றும் மோடி பேசினார்.

அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்தாலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆண்டு தோறும் தனக்கு குர்தா மற்றும் இனிப்புகள் அனுப்புவதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.

"எனக்கு கோபம் வராததை கண்டு மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். கோபம் வரும் சூழலை நான் ஏற்படுத்திக்கொள்வது இல்லை” என்று மோடி கூறியுள்ளார்.

”பலர் என்னிடம் அதிக நேரம் தூங்குங்கள் என்று கூறினார்கள். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூட கூறினார். ஆனால், எனக்கு 3 - 4 மணி நேரத்திற்கு மேலான தூக்கம் தேவையில்லை” என்றும் மோடி கூறினார்.

என்னைப்பற்றி வரும் மீம்ஸ்களை பார்த்து சந்தோஷப்படுவேன். குறிப்பாக அதில் இருக்கும் கற்பனைதிதிறன் மகிழ்ச்சியை கொடுக்கும். சமூக ஊடகங்கள் பொதுவான மனிதனின் மனநிலையைப் பற்றி எனக்கு நல்ல கண்ணோட்டத்தை தருகிறது என்றும் மோடி பதிலளித்துள்ளார்.

First published: April 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்