‘இதுவரை இல்லாத அளவிற்கு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட்?’ - நிதித்துறை இணையமைச்சர் விளக்கம்

பணம் - மாதிரிப்படம்

நிதி, வரி உள்ளிட்டவை தொடர்பான விபரங்களை பரஸ்பரம் பெறுவதற்கு சுவிஸ் அரசுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, தேவைப்படும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

 • Share this:
  இதுவரை இல்லாத அளவிற்கு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ளதாக வெளியான தகவல் குறித்து மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்ற மாநிலங்களவையில் விளக்கம் அறித்துப் பேசினார். இது குறித்து இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பேசுகையில், “இந்தியா, சுவிட்சர்லாந்து இடையிலான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தப்படி நிதி சார்ந்த தகவல்களை இரு நாடுகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்கின்றன. சமீபத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ளதாக, ஊடகங்களில் செய்தி வெளியானது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த டெபாசிட், கறுப்பு பணம் அல்ல என்றும் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இது குறித்து சுவிஸ் தேசிய வங்கி, சமீபத்தில் மத்திய அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. அதில், தேசிய வங்கியின் புள்ளிவிபரங்கள் ஒட்டுமொத்த சுவிஸ் வங்கித் துறையின் ஆண்டு நிதிநிலை அறிக்கையை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பங்கஜ் சவுத்ரி


  சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தாலும், அந்த வங்கி உள்நாட்டில்தான் இயங்க வேண்டும் என்பது கட்டாயமல்ல; வேறு நாடுகளில் கூட இயங்கலாம். எனவே சுவிஸ் வங்கித் துறையின் நிதியாண்டு டெபாசிட் விபரத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் தொடர்பான ஆய்வுக்கு பயன்படுத்துவது சரியாக இருக்காது, என, சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது.

  நிதி, வரி உள்ளிட்டவை தொடர்பான விபரங்களை பரஸ்பரம் பெறுவதற்கு சுவிஸ் அரசுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, தேவைப்படும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன” என்று கூறினார்.

  நிர்மலா சீதாராமன்

  இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் 23 ஆயிரத்து 675 கோடி ரூபாய் கூடுதலாக செலவுக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அனுமதியை கோரினார். நாடாளுமன்ற மக்களவையில் நடந்த கூட்டத்தில் மானியங்களுக்கான துணை கோரிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், நடப்பு நிதியாண்டில் 1.87 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகிறது. இதில், 23 ஆயிரத்து 675 கோடி ரூபாயை மத்திய அரசு நேரடியாக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மீதமுள்ள தொகை, சேமிப்பு, வருவாய் மற்றும் இதர வழிகளில் திரட்டப்படும் என்று தெரிவித்தார்.

  நிர்மலா சீதாராமன்


  Must Read : பெண்களுக்கு வழங்கும் இலவச பேருந்து டிக்கெட்... இப்படியும் ஒரு மோசடியா...!

  மேலும், இதில் 1.59 லட்சம் கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கான ஜி.எஸ்.டி., இழப்பீடு தொகையாக வழங்கப்படும். இதில் மத்திய அரசுக்கு நேரடி செலவு எதுவும் இல்லை.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு 16 ஆயிரத்து 463 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகிறது. மேலும் சுகாதார ஆராய்ச்சி மற்றும் தொற்று தடுப்பு அவசரகால பணிகளுக்கு 526 கோடி ரூபாய் கூடுதல் நிதி தேவைப்படுகிறது. ஏர் - இந்தியா நிறுவனத்தின் கடன்கள் மற்றும் இதர செலவுகளுக்கு 2,050 கோடி ரூபாயும், 2019 - 20ஆம் ஆண்டுக்கான சர்க்கரை ஆலை உதவி தொகை வழங்க 1,100 கோடி ரூபாயும் தேவைப் படுகிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கான கடன் தள்ளுபடிக்கு 1,222 கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: