இந்திய விமானப்படை வீரர்களுக்குத் தலை வணங்குகிறேன் - மோடி பெருமிதம்
இந்தியா பாதுகாப்பானவர்களின் கைகளில் உள்ளது என்பதை உணர வைப்பேன் என்றும் இந்தியாவை அச்சுறுத்தும் எதையும் விட்டு வைக்கமாட்டோம் பிரதமர் மோடி உரை

பிரதமர் மோடி
- News18
- Last Updated: February 26, 2019, 7:08 PM IST
பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்த இந்திய விமானப்படை வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் என்றும் எதற்காகவும் யாருக்காகவும் இந்தியா அடிபணியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 41 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலை பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற இயக்கம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1000 கிலோ வெடிகுண்டு பயங்கரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே ராஜஸ்தானில் உள்ள சுருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டுக்கு எதிரான செயலைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம் என்றார். பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்த இந்திய விமானப்படை வீரர்களுக்குத் தலை வணங்குகிறோம் எனக் கூறிய பிரதமர், இந்தியா பாதுகாப்பானவர்களின் கைகளில் உள்ளது என்பதை உணர வைப்பேன் என்றும் இந்தியாவை அச்சுறுத்தும் எதையும் விட்டு வைக்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 41 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புல்வாமா தாக்குதல் நிகழ்த்தப்பட்ட இடம்.