ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு: எஸ்பி, டிஎஸ்பி பணியிடைநீக்கம்

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு:  எஸ்பி, டிஎஸ்பி பணியிடைநீக்கம்
உ.பி. போலீஸ்
  • Share this:
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் இளம்பெண், கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்ட விசாரணை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணியிடைநீக்கம் செய்யப்படும் எஸ்.பி. மற்றும் டிஎஸ்பிக்கு உண்மையை கண்டறியும் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 19 வயது இளம்பெண்ணை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்களுக்குப் பிறகு உயிரிழந்தார். இளம்பெண்ணின் சடலத்தை போலீஸாரே இரவு நேரத்தில் தகனம் செய்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பதற்காக வியாழக்கிழமை சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைதுசெய்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் தெரிக் ஓ பிரீன், ககோலி ஹோஷ் தஸ்திதார், பிரதிமா மொண்டல், முன்னாள் எம்.பி., மமதா தாக்கூர் உள்ளிட்டோர் சென்றனர்.

டெல்லியிலிருந்து சென்ற அவர்களை ஹத்ராஸ் எல்லையிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட தெரிக் ஓ பிரீனை போலீஸார் கீழே தள்ளிவிட்டனர். தங்களை தடுப்பது ஏன் என கேள்வி எழுப்பியபோது, எம்.பி., பிரதிமா மொண்டல் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும், அவர் கீழே விழுந்ததும் ஆண் போலீஸார் தொட்டதாகவும் முன்னாள் எம்.பி., மமதா தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். இது வெட்கக்கேடானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
First published: October 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading