ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்கப்போவது யார்? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்கப்போவது யார்? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..

உச்ச நீதிமன்றம்

தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் உட்பட 680 பேர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஹத்ராஸ் பட்டியல் இன இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிப்பதா அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதா என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று அறிவிக்க உள்ளது.

  கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு ஹத்ராஸ் இளம்பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ அல்லது சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  அதில், விசாரணை முறையாக நடைபெற இந்த வழக்கை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.  Also read... ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை: திமுக மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி- கனிமொழி உள்ளிட்டோர் கைது

  இதனிடையே, ஹத்ராஸ் பட்டியல் இன இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயன்றதாக தேசதுரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் உட்பட 680 பேர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.
  Published by:Vinothini Aandisamy
  First published: