உ.பியில் கொலை செய்யப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை - சர்ச்சையைக் கிளப்பும் காவல்துறையின் புது விளக்கம்

மாதிரிப் படம்

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் தடயவியல் அறிக்கையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று முடிவு வந்துள்ளது என்று காவல்துறை அதிகாரி பிரஷாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சண்ட்பா பகுதியில் வயலில் தாயுடன் வேலை செய்து கொண்டிருந்த 19 வயது இளம்பெண்ணை 4 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மருத்துவமனையில் 15 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு இளம்பெண் உயிரிழந்த நிலையில், இறுதி மரியாதைக்கு அவகாசம் அளிக்காமல், சடலத்தை போலீஸார் எடுத்துச் சென்று நள்ளிரவில் தகனம் செய்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

  இந்த வழக்கு குறித்து தெரிவித்த உத்தரப் பிரதேச மாநில காவல்துறை கூடுதல் தலைவர் பிரஷாந்த் குமார், ‘அந்த பெண்ணின் தடயவியல் அறிக்கை, பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று உறுதியாக விளக்குகிறது. கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பெண் உயிரிழந்துள்ளார் என்று பிரதேச பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.


  தடயவியல் அறிக்கையில், விந்தணுக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்தப் பெண்ணின் இறுதி வாக்குமூலத்தில் கூட, பெண் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கவில்லை. ஆனால், கடுமையாக அடித்தாக கூறினார். சமூக நல்லிணகத்தைக் கெடுப்பதற்காகவும், சாதிக் கலவரங்களை உருவாக்குவதற்காகவும் சிலர் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: