முகப்பு /செய்தி /இந்தியா / புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: "சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?" - பிரசாந்த் கிஷோர் கேள்வி!

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: "சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?" - பிரசாந்த் கிஷோர் கேள்வி!

சீமான், பிரசாந்த் கிஷோர்

சீமான், பிரசாந்த் கிஷோர்

வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளும் அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் - பிரசாந்த் கிசோர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வடமாநிலத்தவர்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக போலி செய்திகள் பரவி வந்தது. இது இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து போலி செய்தி பரப்புபவர்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்திருந்தது.

இந்த சம்பவத்தில் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் பீகாரை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இரு மாநில அரசுகளும் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையின்போது வடமாநில தொழிலாளர்கள் குறித்து சீமான் பேசிய வீடியோ ஒன்றை பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளும் அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் சீமானை மட்டும் ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த வீடியோவை இந்தியில் மொழிப்பெயர்த்து பிரசாந்த் கிஷோர் பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Migrant Workers, Prashant Kishor, Seeman