பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை மம்தா பானர்ஜி புறக்கணிக்க முடிவு?

பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை மம்தா பானர்ஜி புறக்கணிக்க முடிவு?

மோடி, மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை மம்தா பானர்ஜி பானர்ஜி புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

  • Share this:
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பா.ஜ.கவுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையை கடுமையான மோதல் நடைபெற்றுவருகிறது. திரிணாமுல் காங்கிரஸிலிருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவுக்கு சென்றுள்ளன. விரைவில் மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கும், பா.ஜ.கவுக்கு இடையில் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த மாதம் 23-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த விழாவில் முதல்வர் என்ற முறையில் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார். அப்போது, மம்தா பானர்ஜி பேசுவதற்காக வந்தபோது, கூட்டத்தில் இருந்த சிலர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பினார்கள். அதனால், ஆத்திரமடைந்த மம்தா பானர்ஜி, இது அரசு நிகழ்ச்சி. உங்கள் கட்சி நடத்தும் நிகழ்ச்சி அல்ல. என்னை அழைத்து வந்து அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது’ என்று மேடையிலேயே கூறி பேச மறுத்துவிட்டார்.

இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலம் புர்பா மிட்னாபூர் மாவட்டத்திலுள்ள ஹால்தியா நகரில் அமைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்சாலை உள்ளிட்ட 4 கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கிவைக்கவுள்ளார். இன்று மாலை ஏழு மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜியும் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்க மாட்டார்கள் என்று செய்திகள் வெளிவருகின்றன.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: